Friday 3 April 2020


மனுசங்க(சிறுகதை)
ராமு அந்த ஊருல ஒருகம்பெனி வைச்சிருந்தாரு. சின்னதாபந்துதயாரிக்கிற கம்பெனிதான் ,ரப்பரை வாங்கியாந்து அரைச்சி அதை வேகவைச்சி பந்தாக்கி ஆடருக்கு அனுப்புறதுதான் அவரு தொழிலு. பெரிய கம்பெனியெல்லாம் கெடையாது பத்து பதினஞ்சுபேரு வேலை செய்வாகவீட்ட ஒட்டித்தான் கம்பெனி

அந்த ஊரு பாய்மாருகளும் மத்தவுகளும் ஒன்னா அண்ணந்தம்பியா மாமன் மச்சான் ஒறவு சொல்லி இருக்குற ஊரு ராமுஒண்ணும் பெரிய பணக்காரர் கெடையாது கொஞ்சநாளைக்கி முன்னாடிவரைக்கும்

அவரு பழங்கானத்தத்துல ஒரு பந்துகம்பெனிலதான் வேலபாத்துக்கிட்டு இருந்தாரு அங்க ரப்பர் பந்து ரப்பர் செருப்புசெஞ்சிக்கிட்டு இருந்தாக அதநடத்துனவரு போனதுக்கப்புறம் அவங்களோட புள்ளைகளுக்கு தொழில்ல விருப்பமில்ல அதுனால மூடிட்டாக இவரு அப்புறம் பல எடங்கள்ள வேலைபாத்தாரு சரிப்படல அதுனால கொஞ்சக்காசப் பொறட்டி இந்தக்கம்பெனிய வச்சாரு இது சீசனுக்குத்தான் ஓடும் அதுனால நெரந்தரமா ஆளுகளுக்கு சம்பளம் குடுத்து வைச்சிக்கட்டுபடியாகாது அதுனால

வீட்டுல சும்மாருக்குற புள்ளைகல வேலைக்கி அமத்துவாரு அதுல பாய்மாருக தெருவுல இருந்து பசங்களும் பொண்ணு களும் வருவாக, வாரச்சம்பளம் குடுப்பாரு. பள்ளிக்கொடம் போற புள்ளைக எல்லாம் முழுப்பரிச்ச லீவுக்கு வந்து வேலைசெய்யும் அந்த லீவுக்குள்ள அதுகளுக்கு ஓரளவு காசுசேந்துடும் அதுவுமில்லாம பள்ளிக் கொடம் தொறக்குறப்ப நோட்டுப்புத்தகம் யூனிபாரம் சாமெண்டிரிபாக்ஸுன்னு குடுப்பாரு. எப்பயும் அவரு சம்சாரம் ஜெயம்தான் மேனேஜ்மெண்டு. அதுநால பயமில்லாமபாய்மாருக தெருவில இருந்துகூட புள்ளக அக்கா அக்கான்னு கூப்புட்டுக்குட்டு வேலைக்கி வருவாக

அதே மாதிரி ரம்சானுக்கு வேலைசெஞ்சி காசுபாப்பாக அந்த சமயம் சீசன் வரும் சேட்டுக்கள் வந்து அடவான்ஸ் குடுத்து பந்து வாங்கிட்டுப் போவாக கம்பெனி ஓரளவுக்கு நல்லா சீசன்ல மட்டும் ஓடும் மத்த நாளுகல்ல ஒண்ணும் வேலை யிருக்காது அப்ப வார புள்ளகளை திருப்பி யனுப்ப மனசில்லாம ஏதாவது வேல போட்டுக் குடுத்து சம்பளமும் குடுப்பாரு ராமு

அதுனால அவரு கம்பெனிக்கி பாய்மாருக நம்பி புள்ளைகளை அனுப்புவாங்க எந்தப்பிரச்சனையுமில்லாமப் போயிக்கிட்டு இருந்துச்சு,

அப்பப்புதுசா ஒருபையன் சாகுல் அமீதுன்னு ஒருத்தன் வேலைக்கிவந்தான் லீவுக்கு வந்திருக்குறதாகவும் குடும்பத்துல கஸ்ட்டம் அதுனால வேலைக்கி வந்துருக்குறதாவும் சொன்னான் பாத்தாப்பாவமா இருந்துச்சு அதுனால வேலையக்கத்துக்க அசால்ட்டா இருக்கக்கூடாது கவனமா இருக்கனும் ஏன்னா பாக்குறதுக்கு ஒண்ணுமில்லாத மாதிரி இருந்தாலும் கவனமில்லைன்னா ஆபத்தாயிடும்ன்னு சொல்லிச்சேத்தாரு ராமு .

அவனும் வேலகத்துக்கிட்டான் ஆனா என்ன வெளையாட்டு புத்தி சாஸ்த்தி அதுனால அவன அதட்டிக்கிட்டே இருக்கனும் இல்லாட்டி கவனம் வைக்க மாட்டான் இதைப் பலதடவ அவன்கிட்ட சொன்னாரு ராமு .அவன் சரிங்கய்யா இனிமே ஒழுங்காருப்பேன் நு சொல்லுவான் ஆனா மறுபடியும் அப்புடித்தான் இருந்தான்

அன்னிக்கி வழக்கம்போலதான் வந்தான் தூங்கிவிழுந்தான் என்னடான்னு கேட்டதுக்கு நேத்து ரெண்டாவது ஆட்டம் ரஜினி படம்பாக்கப்போனேன்னான்

தூங்கிவிழாம வேலபாருன்னுஜெயம்அக்கா சொல்லிச்சி அவனுக்கு வீட்டுல இருந்து டீயும் போட்டுக்குடுத்துச்சு வேலயில கவனம் வையி முடியலன்னா வீட்டுக்குப் போ போயிட்டு நாளைக்கிவான்னு சொல்லிச்சி சொல்லிட்டு வீட்டுக்குள்ள ஒருவேலையாபோயிடுச்சு

அப்ப கம்பெனிக்குள்ள பெரிய வெடிச் சத்தம் உள்ளாற ஒரே பொகமூட்டம்
நல்லவேளை பிள்ளகளெல்லாம் வெளிய நின்னு டீகுடிச்சிட்டு இருந்ததுக இவன் வேணாமுன்னுட்டு உள்ளய இருந்தான்

ஆளுக எல்லாம் உள்ள போயித்தேடுனாக இவன் உள்ளாற மயங்கிக்கெடந்தான் ஒடனே ஜெயமக்கா எல்லாரையும் கூப்புட்டுச்சு. உள்ளுர் ஆசுபத்திரிக்கி கொண்டுபோனாக அவங்க ஒடனடியா பெரிய ஆசுப்பத்திரிக்கிக் கொண்டு போகச்சொல்லிட்டாக ஆட்டோவுல தூக்கிப்போட்டுட்டு ஊருலயே பெரிய தனியார் ஆசுப்பத்திரிக்கி கொண்டு போனாக அங்க ஒடனடியா ஒருலட்சரூவா கட்டச்சொன்னாக. ராமு வீட்டுக்குபோன் பண்ணி நகநட்டெல்லாம் எடுத்துட்டு வரச்சொல்லி அத சேட்டுகடையில குடுத்து காசபொறட்டி க் கட்டுனாரு சாகுலுக்கு தலையிலயும் ஒரு கண்ணுலயும் அடி

கம்பெனில விசாரிச்சப்ப சாகுல் நீராவிய மூடாமவிட்டதுனால பிரஸ்ஸரு அதிகமாயி வெடிச்சதாச்சொன்னாக கம்பெனில ஏகப்பட்டசேதமாயிப்போச்சு
சாகுல் வீட்டுக்குத்தகவல் சொன்னாக
அவனோட அம்மாவும் அப்பாவும் வந்தாக
எம்புள்ளைக்கி என்னாச்சுன்னு அழுதாக

அப்ப பெரிய டாக்குட்டரு வந்தாரு அவன் உசுறுக்கு ஒண்ணும் ஆபத்தில்ல சரியான நேரத்துல கொண்டாந்து சேத்ததுனால காப்பாத்திட்டோம் ஆனா ஒருகண்ணு பாதிக்கப்பட்டுருக்கு அது பத்தி எதுவும்சொல்லமுடியாதுன்னாக சாகுலோட அம்மாவுக்கும் ராஜாங்கம் ஆறுதல் சொன்னாரு எவ்வளவு செலவானாலும் சரி எதை வித்தாவது சரிபண்ணிடுவோம் கவலப்படாதீகன்னாரு

அப்ப சாகுலோட அப்பா அவரு கையப்புடிச்சிக்கிட்டாரு அய்யா நாங்க இல்லாதவுக எங்களுக்கு ஒரேபுள்ள எப்புடியோ உசிறக்காப்பாத்திட்டீக எப்புடி நன்றிசொல்லுறதுன்னு தெரியலன்னாரு
இதுக்குள்ள சாகுல் கண்ணு முழிச்சிட்டான் போயிப்பாக்கலாமுன்னு சொன்னாக

தலையிலயும் கண்ணுலயும் கட்டுப்போட்டிருந்துச்சு ஆனா தெளிவா இருந்தான் அவனோட அம்மா அப்பாவப்பாத்ததும் அழுதான் அவுகளுக் அழுதாக பின்னாடி நிக்கிற ராமுப்பாத்தான் அய்யா என்ன மன்னிச்சிடுங்க நீங்க அப்ப அப்ப சொல்லுவீங்க வெளையாட்டுத்தனம் கூடாதுன்னு நான் கேக்கல வெளையாட்டுத்தனத்தால இது நடந்துபோச்சு இதுக்கு நான் தான் காரணம்ன்னான். அதுக்கு ராமு சொன்னாரு அது விதி ஒனக்கு எப்புடிகண்ணத்திருப்பித்தரப்போறன்னு தெரியலையேன்னு கண்ணு கலங்குனாரு

அப்ப சாகுலோட அப்பா சொன்னாரு இங்க நீங்க பணம்கட்ட என்ன பாடுபட்டீங்கன்னு எனக்குத்தெரியும் கவருமெண்ட் ஆசுபத்திரிக்கிக்கூட கொண்டு போயிருக்கலாம் ஆனா நீங்க விபத்துக்கு இவந்தான் காரணமுன்னுதெரிஞ்சும் ஒங்க புள்ளமாதிரி நெனச்சு இங்க கொண்டாந்து செலவு பண்ணுனீங்க ஒங்களைக் கையெடுத்துக்கும்புடுறோமுன்னு கண்ணு கலங்கிச்சொன்னாக அப்பசாகுலோட கண்ணும் நனைஞ்சிருந்துச்சு ராமு கண்ணத்தொடச்சிக்கிட்டாரு
கவிச்சிகரம்அ.முத்துவிஜயன்

No comments:

Post a Comment