Friday 3 April 2020


மணியாடர்
கோமதியம்மா மகன் வெளியூர்ல இருந்தான் . கலியாணமாகி புள்ளகுட்டியெல்லாம் ஆகிப்போச்சு

அதுனால அம்மாவ வந்து அடிக்கடி பாக்குறது இல்ல. .ஆனா மாசாமாசம் டான்னு மணியாடர் மாத்திரம் பண்ணிடுவான்.டான்னுஅஞ்சாந்தேதியானா 1000 ரூவா மணியாடர் வந்துடும். அந்தஏரியாபோஸ்ட்மேன் அப்துல்லா தான் கொண்டாந்து குடுத்துட்டு கையெழுத்து வாங்கிட்டுப்போவாரு. அவரும் வயசானவருதான். அடுத்தவருசம் ரிட்டயர்மெண்டுன்னு சொல்லிட்டு இருந்தாரு. அந் மணியாடர் பணத்தைக்குடுத்துட்டு அதுக்குக்கீழ கொஞ்சூண்டு எடமிருக்கும் . அதுல நான் நல்லாருக்கேன்அம்மாநீங்கநல்லாருக்கீகளா சீக்கிரம் லீவு கெடச்சவன்ன வந்து ஒங்களைப்பாக்குறேன் இப்படிக்கு உங்கள் அன்புமகன்ன்னு எழுதிருப்பான். அத கிழிச்சி வாசிச்சிக்கைல குடுத்துட்டுப் போவாரு அப்துல்லா. கோமதிக்கு சரியா கண்ணு தெரியாது.

அதப்பாக்குறப்பவும் கேக்குறப்பவும் மகனே நேருல வந்து சொன்னமாதிரி சந்தோசமா இருக்கும் கோமதியம்மாவுக்கு

அதுக்காகவே காலண்டரக்கிழிச்சி ப்பாக்கும். எப்ப அஞ்சாம்தேதி வருதுண்ணு.

அப்துல்லா கைல காசுகுடுக்கும்போது

வாங்கிட்டு அவருக்கு பத்துரூவா குடுக்கும் கோமதியம்மா, அவரு வேணாம்ன்னாலும் விடாது. நீயும் என் மகன் மாதிரிதான் . அவன் என்கிட்டப்பேசுறதில்ல. அவன் எழுதுனத வாசிக்கும்போது உன்னோட

வடிவத்துல என் மகன நான் பாக்குறேன்னு சொல்லும். அவரால தட்டமுடியாது

அதுபாட்டுக்கு பணம் வந்துட்டு த்தானிருந்துச்சு. கோமதியம்மாவும் சந்தோசமா வாங்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்துச்சு.

அந்தமாசம் பணம் வரல என்னான்னு தெரியல அப்துல்லாக்கிட்ட க்கேட்டுச்சு

பணம் வரலயான்னு. அவரும் சொன்னாரு வரலன்னு. கேட்டதும் கோமதிக்குக்கண்ணு கலங்கிடுச்சு. என் மகனுக்கு என்ன ஆச்சோன்னு. அதே நேரத்துல அந்தக் காசவைச்சித்தான் ஒருவேளைக் கஞ்சினாலும் பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதுவும் நின்னுபோச்சுன்னா பட்டினி இல்ல தெருவுல கையேந்த வேண்டிய நெலமதான் கோமதிக்கு. வயசு 80 ஆகிப்போச்சு கண்ணும் சரியாத்தெரியாது. இத அப்த்துல்லாக்கிட்ட சொல்லிப்பொழப்புச்சு. போய் நல்லாப்பாருய்யான்னு

ஆனா அப்துல்லா சொன்னாரு இன்னிக்கி வரல ஆனா நாளைக்கி வரலாம். போஸ்ட்டாபீஸ் மூணுநாளு லீவு நாளைக்கிப்பாக்கலாம்ன்னு

அடுத்தநாளு அப்துல்லா சந்தோசமா வந்தாரு. வந்து காசுகுடுத்தாரு. அப்புறம் வழக்கம்போல வாசிச்சிக்காமிச்சாரு

கையெழுத்துகேக்கல . என்னா கையெழுத்து வாங்காமபோறீகன்னு கோமதி கேட்டவன்ன ஆமா அம்மா மறந்துட்டேன்னு கையெழுத்து வாங்கிக்கிட்டாரு அப்புறம் டாண்ணு அஞ்சாம்தேதி வழக்கம்போல காசு கொண்டாந்து குடுத்தாரு பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. திரும்பப்பிரச்சனை

மணியாடர் வரல. அப்ப அப்துல்லாக்கிட்ட கோமதிகேட்டுச்சு. என்னா பிரச்சனை

மணியாடர் வரலியா என் மகனுக்கு என்ன ஆச்சுன்னுதெரியலயேன்னு அழுதுச்சு

மணியாடர் வரும் கொஞ்சம் லேட்டாகும்ன்னாரு அப்துல்லா .

கோமதிகைல காசுமில்ல. சாப்பாட்டுக்கு வழியுமில்ல, என்னா ப்ண்ணுறதுன்னு தெரியல. அப்துல்லாவும் சரியா பதில் சொல்லமாட்டேன்றாரு. அப்ப ஒருத்தர் சொன்னாரு எங்க ஊருல இப்புடித்தான் வந்த மணியாடர் பணத்த அந்த ஊரு போஸ்ட்மேன் வாங்குனமாதிரி கையெழுத்துப்போட்டுட்டு அவரே அமுக்கிட்டாரு. அப்புறமா சம்பந்தப்பட்ட ஆளு போஸ்ட்டாபீசுல கம்ப்ளெயிண்டு குடுத்தபின்னாடி அந்த போஸ்ட்மேன் அலறியடிச்சிட்டு வந்து பணத்தக் கட்டுனாருன்னு.

கோமதிக்கி ஒருமாதிரியாகிப்போச்சு அப்துல்லா அப்புடிச்செய்வாரான்னு சந்தேகம் சரி அவருக்கிட்டயே கம்ப்ளெயிண்டு பத்திப்பேசிப்பாப்பம் அவரு என்ன சொல்றாருன்னு கவனிப்பம்னு அன்னிக்கி அப்துல்லாக்கிட்ட கம்ளெயிண்டு குடுக்கப்போறேன்னு சொல்லிப்பாத்துச்சு.கோமதி அவரு அப்புடியா கம்ப்ளெயிண்ட என் கிட்டக்குடுங்க நான் கொண்டுபோயி சேத்துடுறேன்னாரு. இது என்னாடா திருடன்கிட்ட சாவியக்குடுக்குறதான்னு யோசனை வந்தாலும் குடுத்துத்தான் பாப்பமேன்னு அவரவைச்சே எழுதி அவரு மூலமாவே போஸ்ட்டாபீசுக்குக்குடுத்து விட்டுச்சு கோமதி

ஒருவாரமாச்சு பதிலொண்ணுமில்ல

அப்ப கோமதிக்குச்சந்தேகம் வந்துச்சு இவரு கொண்டுபோயிக்கொடுத்தாரா இல்லையான்னு. சரி நேரடியா போஸ்டாபீசுலயேபோயிக்கேட்டுடுவோம்னு முடிவுபண்ணி த் தட்டு த்தடுமாறிப் போயி சேந்துடுச்சு இதோட போதாத நேரம் அப்துல்லாவே அங்க இருந்தாரு. இதைப்பாத்துட்டு அம்மா நீங்க எதுக்கு இங்க எல்லாம் வாறீக. என்கிட்டச் சொல்லபுடாதோ நான் பாக்க மாட்டனான்னாரு

திருட்டுப்ப்யலா இருக்கானே எப்புடியெல்லம் சமாளிக்கிறான்னு நெனச்சிக்கிட்டு ஒண்ணுமில்ல மணியாடர் வராததுக்குக்கம்ப்ளெயிண்டு குடுத்தனே என்னாச்சுன்னு போஸ்ட்டு மாஸ்ட்டரக்கேக்கலாம்னு வந்தேன்னு சொன்னவன்ன அப்துல்லா மொகம் மாறிப்போச்சு. நம்ம சந்தேகம் சரிதான் நு நெனச்சிக்கிட்டு போஸ்டுமாஸ்ட்டர்கிட்ட கேட்டுச்சு.என்கம்ப்ளெயிண்ட்வந்தததான்னு . அதுக்கு அவரு எந்தக்கம்ப்ளெயிண்ட் அதுமாதிரி ஒண்ணும் வரலயேன்னவன்ன

சந்தேகம் உறுதியாயிடுச்சு. இப்ப நேரடியாவே போஸ்ட்மாஸ்ட்டர்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்னுச்சு அப்துல்லா மணியாடர் பணத்த அமுக்கிட்டதா

ஆனாஅவருசெக்பண்ணிப்பாத்துட்டுச்சொன்னாரு.கடந்த ஒன்றை வருசமா மணியாடர் எதுவுமே உனக்கு வரலயே முன்னாடி வந்ததோட சரி . அப்புறம் வரவே இல்லைன்னு சொன்னதும் கோமதிக்கி எங்கயோ இடிச்சது

அப்துல்லாக்கிட்டக்கேட்டுச்சு இவரு சொல்றது உண்மையாண் நு. அவரு ஆமான்னாரு. அப்புறம் எப்புடி இந்தன நாளு பணம் வந்துச்சு எனக்குன்னு கேட்டுச்சு கோமதி

அப்ப அப்துல்லா சொன்னாரு அம்மா போனவருசம் ஒங்களுக்கு பணம் ஒருதடவ லேட்டா வந்துச்சே நாவகமிருக்கான்னாரு

ஆமா போஸ்டாபீசு லீவுனாலன்னு சொன்னீக. ஆமா அப்புடிப்[பொய் நாந்தான் சொன்னேன் . அந்தமாசமே பணம் வரல

அதுல இருக்குற போன் நம்பருக்குக்குப் போன் பண்ணிக்கேட்டோம். அவ்ரு ஒரு ஆக்ஸிடெண்டுல சிக்கி முடியாம இருக்குறதாகவும் ரொம்ப சிக்கல்ல இருக்கதாகவும் பணம் அனுப்புற சூழ்நிலையில் இல்லன்னும் சொன்னாக

உங்க நெலமையப்பாத்தாப்பாவமா இருந்துச்சு அதுனால நான் தான் என்னோட பணத்தை மணியாடர் வந்ததாக்குடுத்தேன் மாசாமாசம்

ஒங்களுக்குக்குகண்ணு தெரியாததால

வராத மணியாடர் வந்ததாவும் அதுல உங்களைப்பத்தி விசாரிக்கிறமாதிரி நானே பொய்யா சொல்லிட்டு க்காசு குடுத்துட்டு வாறேன் எங்கம்மா செத்துப்போயி பல வருசமாச்சு. அவங்களுக்குக்குக்குடுக்குறதா நெனச்சு உங்களுக்குக்குடுத்தேன் . இந்தமாசம் ரம்சான்ன்னால எனக்கு பணத்தட்டுப்பாடு அதான் லேட்டு நாளைக்கிக்குடுத்துருறேன் அம்மான்னாரு கண்ணு கலங்க

கோமதி அவரக்கட்டிப்புடிச்சி அழுதுடுச்சு

என் மகனேன்னு. அதால அதுக்குமேல பேசமுடியல கண்ணீர்தாரதாரயா வழிஞ்சிச்சு. ஒன்னயப்போயி சந்தேகப்பட்டுட்டனே எனக்கு சாமி நல்ல கெதிய குடுக்காது என்ன மன்னிச்சிரய்யான்னு கால்ல விழப்போச்சு அதத்தாங்கிப்புடிச்ச அப்துல் சொன்னாரு வயசானவுக கால்ல நாம் விழலாம் ஆனா எந்த சமயத்திலயும் அவுக நம்மகால்ல விழக்கூடாது அது பெரிய பாவம் வேணாம்மா ந்னாரு கண்ணுகலங்க

பாத்துட்டு இருந்த போஸ்ட்டு மாஸ்ட்டரு அடுத்தமாசத்துல இருந்து நானும் பணம் தாறேன் உன் சிரமத்தக் கொறைக்கன்னாரு நெகிழ்ச்சியோட......

கவிச்சிகரம் .முத்துவிஜயன்

No comments:

Post a Comment