Friday 3 April 2020



ஸியா (சிறுகதை)
அவளுக்குப் புடிச்சது அரசியல் சமூகசேவை. அரசியல்ல ஆர்வம் அதிகம் அதுநால ஒரு கட்சில தன்ன இணைச்சிக்கிட்டா அவளோட வீட்டுக்காரரும் அதுக்கு தடைபோடல கார்ப்பரேசன் எலெகசன்ல நின்னு வார்டுமெம்பரா அவளை மக்கள் ஜெயிக்க வைச்சாங்க. ஏந்தெரியுமா. அவ அந்த ஏரியாவுல இருக்குறவுகளுக்கெல்லாம் அரசாங்க சலுகைகளை அறிமுகம் பண்ணி வச்சா, பேங்குக்குக்கூட்டிபோயி கணக்குத்தொடங்கவைச்சி சுய தொழிலுக்கு கடன் வாங்கிக்குடுத்தா
பொண்ணுகளுக்கு பிரசவத்துக்கு கவர்மெண்டு குடுக்குற சலுகைகளை பேசி வாங்கிக்குடுத்தா இன்னம் அந்தப்பகுதில நடக்குற ந்ல்லது கெட்டது எல்லாத்துலயும் முன்னாடி நிப்பா.அதுனால அவளுக்கு நல்லபேரு இருந்துச்சு
அவளோட வீட்டுக்காரரு இதுக்கு ஊக்கம் குடுத்தாரு அவளுக்கு ரெண்டுபொண்ணுக அவுகளுக்கும் நல்ல விசயங்களை ச்சொல்லிக்குடுத்தாஅதுக அம்மா அம்மான்னு உசுறவிடும்
ரசியான்னா எல்லாருக்கும் புடிக்கும். சும்மாருக்குறநேரத்துல வீட்டுல தையல் எம்பிராடிங் பண்ணிக்கிட்டு இருந்தா. பொண்ணுகளுக்கு ஜாக்கெட் அவ தைச்சா கச்சிதமா இருக்கும் அதுக்காகவே எல்லாரும் அவகிட்டக்குடுப்பாக பல வேலைகளுக்குப்போறதால சரியான நேரத்துக்குக்குடுக்கமுடியாது இருந்தாலும் அவகிட்டத்தான் எல்லாரும் குடுப்பாக
அன்னிக்கி ஞாயித்துக்கெழம நெறையா தையல் வேலை நின்னு போயிக் கெடந்ததுனால வீட்டுவேலையெல்லாம் முடிச்சிட்டு தையல் மிசின்ல ஒக்காந்தா. பொண்ணுகவெளிய வெளாடிட்டு இருந்தாக வீட்டுக்காரரு வீட்டுக்குள்ள இருந்தாரு. வந்திருந்த துணிகளைப்பிரிச்சி ஒரு ஜாக்கெட்டுத்துணிய எடுத்து வெட்ட ஆரம்பிச்சா. அப்ப எதேச்சையா கையத்தூக்குனப்ப மேல ஓபனாஇருந்த கரண்டுவயருல கத்திரிக்கோல் பட்டுருச்சு
அம்புட்டுத்தேன் அம்மான்னு ஒருஅலறல் பேச்சுமூச்சில்லாம விழுந்துட்டா அவளோட வீட்டுக்காரரு ஒடிவந்து பாத்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாரு. புள்ளைக ஓடிவந்து பாத்துட்டு அம்மா அம்மான்னு கதற ஆரபிச்சிதுக அதுக்குள்ள ஆளுக எல்லாம் ஓடியாந்தாக பகத்துல இருந்த ஆட்டோக்காரரு அம்மாவா அய்யோன்னு பதறிட்டு ஆட்டோவில ஏத்தச்சொன்னாரு
பக்கத்துல இருந்த கவருமெண்ட் ஆசுப்பத்திரிக்கி தூக்கிட்டு ஓடுனாக வீட்டுக்காரரும் புள்ளைகளும் அழுதுக்கிட்டே அங்க போனாக அன்னிக்கி ஞாயத்துகெழம ஆசுப்பத்திரில பெரிய டாக்குட்டரு ஆருமில்ல. அங்க இருந்த சின்ன டாக்குட்டரு பாத்துட்டு அம்புட்டுத்தேன் சோலிமுடிஞ்சிருச்சுன்னு கையபெசஞ்சாரு மகளுக கதறி அழுக ஆரபிச்சாக வீட்டுக்காரரு நெலகுலஞ்சிட்டாரு தூக்கிட்டுப்போக சொல்லிட்டாக
அப்பத்தான் ஒருத்தரு சொன்னாரு எதுக்கும் பிரைவேட்டு ஆசுபத்திரில பாப்பம் பக்கத்துல ஒருஆசுபத்திரி இருக்கு அங்க எப்பயும் பெரிய டாக்குட்டரு இருப்பாகன்னு சொன்னதும் தூக்கிட்டு ஓடுனாக அங்க டாக்குட்டரு மகேஸ்வரன் அப்புறம் அவங்க குடும்பமே டாக்ட்டர்க தான் . அங்க போனவன்ன பாத்துட்டு
மகேஸ்வரன் வீட்டுக்காரபாத்து பதட்டப்படாதீக காப்பாத்திடலாம் ந்னு ஆறுதல் சொல்லிட்டு உள்ளாற கொண்டுபோயி வைத்தியம் பாத்தாக வீட்டுல இருக்குற எல்லா டாக்குட்டரும் வந்துட்டாக
இதுக்கு நடுவுல சனங்களும் சேந்துடுச்சு
அவுக அவுக கைல கெடச்ச காசெல்லாம் சேத்துகொண்டாந்துருந்தாக அம்மாவ எப்புடியாவது காப்பாத்துங்க டாக்குட்டருன்னு. அத நாங்க பாத்துக்கிறோம் நீங்க போயி அவங்க அவங்க சாமிய வேண்டிக்கங்கன்னாக
அப்ப ஒரு வயசான அம்மா கண்ணுல தண்ணியோட சொல்லிச்சி சாமி நானு சும்மாதான கெடக்கேன் என் உசுற எடுத்துக்கிட்டு அந்தப்புள்ள உசுறக்காப்பாத்து அது இருந்தாலும் நாளுபேருக்கு நல்லது செய்யும் ந்னுச்சு
பாத்துட்டு இருக்குறவுக கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு, உள்ளாற டாக்குட்டருக ரஸியாவோட நெஞ்சில அமுக்கி அமுக்கி முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாக
மூலையில அவ புருசனும் புள்ளைகளும் வேண்டிக்கிட்டு இருந்தாக அவவீட்டுக்காரரு கடவுளே ரசியாவத்திருப்பிக்குடுத்துரு ந்னு கண்ணீரோட வேண்டிட்டு இருந்தாரு ஊரு மொத்த சனமும் குமிஞ்சு கெடந்துச்சு
ஒருமணி நேரத்துக்கு அப்புறம் உள்ளாற ரசியா இருமுற சத்தம் கேட்டது ..அதுக்கபுறம் அரைமணிநேரம் கழிச்சி டாக்குட்டரு வெளிய வந்து ரசியா புருசனயும் புள்ளைகளையும் கூப்புட்டுச்சொன்னாரு ரசியாவ கடவுள் நமக்குத்திரும்பக்குடுத்துட்டாருன்னு
அப்ப அவங்க கண்ணுல இருந்து கண்ணீர் தார தாரயா ஊத்துச்சு டாக்குட்டரு கால்ல உழுந்தாக அய்ய நீங்க சாமிமாதிரின்னாக அவரு அமைதியா சிரிச்சிட்டே சொன்னாரு முயற்ச்சி நம்மது .... முடிவு கடவுளோடது உங்க வேண்டுதலும் என்னோட மருத்துவமும் ரசியாவோட வில் பவரும் தான் ரசியாவோட மறுபிறப்புன்னாக
வந்துருந்த சனங்க கண்ணுகள்லயும் ஆனந்தக்கண்ணீர் வந்துச்சு என்னமோ அவுக குடும்பத்துல ஒருத்தரு பொழச்சமாதிரி......
கவிச்சிகரம் .முத்துவிஜயன்


No comments:

Post a Comment