Friday 3 April 2020


இது நடந்து ரொம்பவருசமாச்சு. ஆன ஆராலயும் மறக்கமுடியாத சம்பவமாப்போச்சு. ஏன்னா அந்த மனுசன் அப்புடிப்பட்டவரு. அகமதுலெப்பைன்றது அவரோடபேரு. மசூதிலதான் இருப்பாரு ஊருக்குஒண்ணுன்னா மொதல்ல வந்து நிப்பாரு அந்த ஊருல ரெண்டு பெரிய சமுதாயமக்களும் அப்புறம் கொஞ்சகொஞ்ச மத்தசமுதாய மக்களுமா இருந்தாக

அகமதோட சமுதாயத்தச்சேந்தவுக எல்லாம் பினாங்குக்குபோயி சம்பாதிச்சி கொஞ்சம் வசதிவாய்ப்போட இருந்தாக வெளிநாட்டுலபோயி சம்பாதிச்சி காச ஊருக்கு அனுப்புவாக . அந்தக்காசுல ஊருக்குள்ள நெறயா நெலம் நீச்சு வாங்கிப்போடுவாக. ஆளுவைச்சி வெவசாயம் பண்ணுவாக அதுனால

அந்தசமுதாயமக்கள் மேலமத்தவுகளுக்குப் பொறாமையும் கொஞ்சம் இருந்துச்சு அவங்க கம்மாக்கரையில குளிக்கவந்தா கம்மாயே மணக்கும் ஏன்னா பொதுவாவே அத்தர் செண்டுன்னு வெளிநாட்டுல இருந்து வாங்கியாந்து போட்டுக்குவாக சோப்பும் மத்தவுக லைப்பாய்க்கூட வழியில்லாம

கரம்பையத்தேச்சுக்குளிக்கிறப்ப ஆளத்தூக்குறமாதிரி வாசனையோட சோப்புக்கொண்டாருவாக செலநேரம்

சின்னதான சோப்ப விட்டுட்டுப் போயிடுவாக அப்ப சின்னபுள்ளக அத எடுத்து மோந்துபாக்கும் ஆரும் பாக்கலைன்னா போட்டுக்குளிச்சிட்டு வீட்டுலபோயி அடிவாங்கும் அடுத்தவுக போட்ட சோப்ப எதுக்கு எடுத்துக்குளிச்சன்னு செலநேரம் சேக்காளிகளுக்கு அவுகளே புதுசாக்குடுப்பாக

அந்த ஊருல இருந்த இன்னொரு பெரியசமுதாயம் மொக்கச்சாமியோடது அவுக மில்லுல வேலபாப்பாக காட்டுவெள்ளாமை செய்வாக கொஞ்சம் மொரட்டுத்தனா இருப்பாக அங்கதான்

இதப்புள்ள சீனியம்மா பொறந்துச்சு அப்பல்லாம் சின்னப்புள்ளயா இருக்குபோதே கலியாணம் பண்ணி வைச்சிருவாக. இதுக்கும் அப்புடித்தான் பண்ணி வைச்சாக . ஆனா என்ன புருசனுக்கும் இவளுக்கும் ஒத்துப்போகல இது எளகுன மனசு அவன் மொரடன்

அதுனால சீக்கிரமே வீட்டுக்குத்திரும்ப வந்துடுச்சு. அது படிச்சது மூணாப்பு

அதுக்குமேல படிக்கமுடியல அதுனால

அந்தப்புள்ளைய மாடுமேய்க்க அனுப்பிட்டாக மாடுக அப்புறம் கொஞ்சம் ஆடுகள கரட்டுமேட்டுக்கு பத்திட்டுப்போயிமேச்சலுக்கு விட்டுட்டு கூட்டியாரதுதான் இதுக்கு வேலை தூக்குப்போணில கூழு குடுத்துருவாக போயிமேச்சிட்டு வரணும்

லெப்ப வீட்டுல ஓரளவு படிச்சிருந்தாக

போஸ்ட்டாபீசெல்லாம் அவுக வீட்டுல வைச்சிருந்தாக கொஞ்சம் சொத்துப்பத்து வைச்சிருந்தாக

ஒருநா சீனியம்மாவோட ஆட்டுக்குட்டி காணாமப்போச்சு ஊரெல்லாம்

தேடியும் கெடைக்கல . சீனியம்மாவும் அவளோட அம்மா ராக்கயியும் தேடுனாக

அப்ப லெப்பயோட தெருவுக்குள்ள அது போனதா அங்குணக்குள்ள சொன்னாக

அதுக்கு ஒருத்தரு சொன்னாரு அங்கபோச்சா அம்புட்டுத்தான் சுக்காவாயிருக்கும் இன்னேரம் ந்னாக

போயிப்பாப்பம் அப்புடிஆச்சுன்னா அப்புறமிருக்கு நாம யாருன்னுகாட்டுறதுன்னா ராக்காயி

அங்கபோனா லெப்ப அந்த ஆட்டுக்குட்டியோட வெளாண்டுக்கிட்டு இருந்தாரு . இவுகளப்பாத்தவன்ன அது துள்ளிக்கிட்டு ஓடியாந்துச்சு

ஒங்களோடகுட்டியா இங்கவந்துச்சு செலபேரு கண்ணுல பட்டா காணாமப்பண்ணிப்புடுவாக அதான் பக்குவமா வைச்சிருந்தேன் கூட்டிட்டுப்போங்கன்னாரு

சீனியம்மாவுக்கு சந்தோசம் சரிபாய்ன்னா

அப்பக்கேட்டாரு புள்ளய மாடுமேய்கவா அனுப்புற பள்ளிக்கொடத்துக்கு அனுப்பவேணியதுதானன்னாரு

அதுக்கு ராக்காயி சொல்லிச்சி நல்லதுதானண்ணே ஆனா அவரு ஒத்துக்கமாட்டீன் றாருன்னுச்சு

ஆனா சீனியம்மா சொன்னா இல்லைஅய்யா நான் படிக்கனும் எனக்கு ஆசைன்னுச்சு அவரு சரிப்பாக்குறேன்னாரு

அடுத்தவாரத்துல அவுக வீட்டுக்கு லெப்ப வந்தாரு பக்கத்து டவுனுல பள்ளிக்கொடம் ஆஸ்ட்டலோட இருக்கு. ஒங்க சமுதாயமேம்பாட்டுக்காக கவருமெண்டு ஏற்பாடுபண்ணிருக்காக . நீங்க காசி ஒண்ணும் குடுக்கவேணாம் எட்டாவது வரைக்கும் படிக்கலாம்ன்னாரு

மொக்கச்சாமி யோசிச்சாரு பொம்பளைப்புள்ளையாச்சேன்னு பாக்குறேன்னாரு. அதுக்கு லெப்ப அது முழுக்க பொம்பளைப்புள்ளக படிக்கிறபள்ளிக்கூடந்தான் நம்பிவிடலாம்ன்னாரு அப்புறம் அவரே கூட்டிட்டுபோயி சேத்துவிட்டு பாவாட சட்டயெல்லாம் வாங்கிக்குடுத்தாரு

இதுநடந்து அஞ்சுவருசமாச்சு சீனியம்மா படிச்சிமுடிச்சிட்டா. வயசும் ஆகிப்போச்சு அவுக அப்பா மறுகலியாணம் பண்ணனுன்னாரு அதுல சீனியம்மாவுக்கு இஸ்டமில்ல. அப்ப கவருமெண்டுல டீச்சருக்கு ஆளெடுத்தாக அதுல குறிப்பா சீனியம்மா சமூகத்துக்குன்னு கேட்டுருந்தாக அதப்பேப்பருல பாத்துட்டு அதுக்குப்போகசொன்னாரு. அப்பஎல்லாம் எட்டவது படிச்ச அந்தசமுதாயபொண்ணுக கம்மின்றதால வேலை ஒடனே கெடச்சிடுச்சுசந்தோசமாப்போனா ஆனா அங்க ஆம்பளைப்பிள்ளகளும் படிக்கிறதுனால புடிக்கல

இதுக்குநடுவுல இந்த ஊருல பள்ளிவாசல்லயே பள்ளிக்கொடம் தொறந்தாக லெப்பதான் எடத்த தானமாக்குடுத்திருந்தாரு

அன்னிக்கி வழியில சீனியம்மாவப்பாத்த அவரு விசாரிச்சாரு செரமத்தச்சொன்னா

அப்ப நம்ம பள்ளிக்கொடத்துக்கு வேலைக்கி வந்துரு நான் ஏற்பாடு பண்ணிடுறேன்னாரு. அன்னிக்கி வீட்டுக்கு வரசொல்லிருந்தாரு . அம்மாவோட போனா அப்ப ஆடரைக்கைல குடுத்தாரு இனிமே உள்ளுர்ரு பள்ளிவாசல்ல இருக்குற பள்ளிக்கொடத்துலவேலபாக்கலாம்ன்னாரு

சீனியம்மாவுக்கு கண்ணு கலங்கிடுச்சு

உங்கள இனிமே வாப்பான்னு கூப்புடட்டுமான்னா அவரும் கண்ணு கலங்கி சரிமகளேன்னாரு

இப்ப அந்த ஊருல பஞ்சாயத்து தலைவருக்கு தேர்தல் வந்துச்சு அப்ப லெப்பயோட சொந்தக்காரரு இப்ராகிம்போட்டிபோட்டாரு அவரும் லெப்பமாதிரிதான் நல்லவரு . அவருக்காக லெப்ப சப்போட்டுப்பண்ணுனாரு

அதேசமயத்துல அக்பருன்னு இன்னோருத்தரு அவுக சமுதாயத்துல இருந்தே போட்டிபோட்டாரு அவரு கொஞ்சம் காசுபாக்குறவரு அவருக்கு மொக்கச்சாமியோட சமுகத்துல சப்போட்டுவாங்குறதுக்குமொக்கச்சாமியப் புடிச்சாரு அவுககாசப் போட்டுப் பண்ணுனாக

அவுக எல்லாம் வந்து லெப்பயப்பாத்தாக

அவுகளைச்சப்போட்டுப்பண்ண . அதுக்கு கம்மாயில் மீனுபுடிக்கிற காண்ட்ராக்டு தாறமுன்னு சொன்னாக ஆனா லெப்ப ஒத்துக்கல

இதுனால ஆளவைச்சி மிரட்டுனாக

ஆனா அவரு பயப்புடல . தேர்தல் நடந்துச்சு அதுல இப்ராகிம் செயிச்சாரு. எதிராளிக கடுப்பாயிட்டாக .லெப்பையோட சப்போட்டுனாலதான் அவரு செயிச்சாரு

அதுனால அவருமேல படுகோவத்துல இருந்தாக மறுநாளு காலையில வழக்கம்போல வயக்காட்டுக்குபோயி பாத்துட்டு கம்மாயில குளிச்சிட்டு வார லெப்ப போனவருதிருமபி வரல .

ஊருபூராம் தேடுனாக அப்ப வயக்காட்டுக்குபக்கதுல இருந்த கெணத்துல வெளிநாட்டு சோப்பு மணத்துச்சு சந்தேகம் வந்து எறங்கித்தேடுனப்ப லெப்ப ஒடம்பு உள்ளாற கல்ல கட்டிக்கெடந்துச்சு

அவர மொக்கமாயன் சமுகத்தச்சேந்தவுக கொண்ணுபுட்டதா ஊரே பேசி கலவரமாக இருந்துச்சு

விசயம் கேள்விப்பட்டு எல்லாரும் ஓடுனாக லெப்ப மெளத்டாயிட்டாருன்னு. சீனியமாவும் ஓடுனா அப்பத்தான் அவர மேல கொண்டாந்தாக அப்ப அவரோட கையி எதையோ இருக்கிப்புடிச்சிட்டு இருந்துச்ச்சு அதப்பிரிச்சிப்பாத்தப்ப அது அக்பரோட ஜிப்பாவுல இருந்து கிழிஞ்சதுணின்னு தெரின்சிபோச்சு

அத்தோட ரெண்டுசமுதாயத்துக்கு நடுவுல நடக்க இருந்த கலவரம் தடுக்கப்பட்டுச்சு

உசுறுபோறப்பயும் கலவரத்த தடுத்த லெப்பையப்பாத்துட்டு கதறி அழுதா வாப்ப்பா வாப்பான்னு அவள ஆராலயும் தேத்த முடியல........

ரெண்டுநாளைக்கி அப்புறம் பள்ளிவாசல்ல இருந்த பள்ளிக்கொடத்துக்குப்போனா அப்ப அவரு திண்ணையில ஒக்காந்துக்கிட்டு வாம்மா மகளேன்னு கூப்புட்ட மாதிரி இருந்துச்சு அவளால அழுகைய அடக்க முடில நடு ரோட்டுல வாப்பா வாப்பான்னு கதறிட்டா.......

கவிச்சிகரம் .முத்துவிஜயன்

No comments:

Post a Comment