Friday 3 April 2020


விழியோரம் (சிறுகதை)
அன்னிக்கிச் சாயங்காலம் மழை சோன்னு ஊத்திக்கிட்டு இருந்துச்சு மழைக்காக எல்லாரும் ஓரமா ஒதுங்கி நின்னுட்டு இருந்தாக
ரோடு எல்லாம் தண்ணி ஆறா ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏற்கனவே அரைகொறையா நனைஞ்சிருந்தவகளெல்லாம் குளிருல லேசா நடுங்கிட்டு இருந்தாக . நல்லா நனைஞ்சவுகளும் ஓடிவந்து அந்த பஸ்டாண்டு செட்டுக்குக்கீழ வந்து சேந்துக்கிட்டாக. நல்ல மழைன்னு ஒருத்தர் சொல்ல இன்னொருத்தரு சனியம்புடிச்ச மழைன்னு திட்டுனாரு கூட ஒருத்தரு அதைஆமோதிச்சாரு ஆமா இன்னேரம்வீட்டுக்குப்போயிருப்பேன்னாரு
ஒருவழியா மழை கொறய ஆரம்பிச்சது . போகலாமா வேணாமான்னு அரைகொற மனசோட செலபேரு ரோட்டுல எறங்குனாங்க

அப்ப அதுவரை குளிருல லேசா நடுங்கிட்டு இருந்த அவன் ரோட்டுத் தண்ணில எறங்குனவுகளை தடுத்தான், போகாதீக போகாதீக கத்துனான். கிழிஞ்ச அழுக்கான பேண்ட் அதுக்குமேல மூணு கிழிஞ்ச சட்டை போட்டு மொகம்பூராம் முடியா பரட்டத்தலையோட இருந்தான் . அப்ப எறங்குன ஒரு பொண்ணோட கையப்புடிச்சி இழுத்தான் போகாதன்னு. அவ சீ போன்னு திமிறுனான் ஆனா அவன் விடல போகாத போகாதன்னான்.
அதுக்குள்ள கொஞ்சப்பேரு அவன்கிட்ட இருந்து அந்தப்பொண்ணு கையப் பிரிக்க முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. இதுக்குள்ள பொம்பளைப் புள்ளகையவா புடிக்கிற அயோக்கியப்பயலேன்னு ஒருத்தன் அவன அடிச்சான் அதத்தொடர்ந்து அவன்மேல சரமாறியா அடிவிழுந்துச்சு ஆனா அவன் கைய விடல அதுனால ஒருத்தன் கட்டை ஒன்ன எடுத்து கையில ஓங்கியடிச்சான் கையில ரத்தம் வந்துச்சு அப்ப அந்தப்பொண்ணோட கைய விடுவிச்சிட்டாங்க அவன் வெலகினான் வெலகி ஒருபொண்ணு கைல இருந்த கொழந்தைய புடுங்கிட்டுத்திரும்ப பஸ்ட்டாண்டுசெட்டுக்குஓடினான்

இப்ப கும்பல் அவனத்தொறத்துச்சுஒருவழியா அவன்கிட்ட கொழந்தையப் புடுங்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. அதுக்குள்ள அவனுக்கு ஏகப்பட்ட அடி தலையிலயும் கைலயும் ரத்தம் ஊத்துச்சு.
அப்ப ஒருத்தருரோட்டுல போய்க்கிட்டு இருந்தவரு வந்து பாத்துட்டுச் சொன்னாரு இவர அடிக்காதீங்க இவன் தப்பான நெனப்புல செய்யல பாவம் மனசளவுல பாதிக்கப்பட்டு இருக்காரு.விட்டுருங்கன்னாரு அப்ப அவரு சொன்னாரு............
இவருபேரு அப்துல்சமது நல்ல வேலையில இருந்தாரு பொண்டாட்டி ஒருமக ஆயிசா ன்னு சின்னக்குடும்பம். நல்ல வேலையில இருந்ததுனால காசுபணத்துக்குக்குக் கொறச்சல் இல்ல பொண்ண பி. படிக்க வைச்சி ருந்தாரு படிச்சிட்டு வீட்டுல சும்மாதானிருந்துச்சு. அப்ப அவங்க வீட்டுக்கு எதுத்தாப்புல ஒரு குடும்பம் குடிவந்துச்சு. அவங்க வயசுல சின்னவங்க கலியாணமாகி அஞ்சாறு வருசம்தானாயிருந்துச்சு. அவங்களுக்கு ஒரு பொண்கொழந்த மூணுவயசுல பாக்க அம்புட்டு அழகாருக்கும், சுட்டித்தனமும் சாஸ்த்தி. அதுபேரு ஸ்ருதி பாக்குறவுகளுக்கு ஒடனே புடிச்சிப்போயிடும். அது மாதிரியே இவரு பொண்ணுக்கும் பொண்டாட்டிக்கும் புடிச்சிப்போச்சிஅதுனால ஸ்ருதி எப்பவும் இவுக வீட்டுலதானிருக்கும். அதோட அம்மா அப்பா வேலைக்கிப்போறதால இவுகளே பாத்துக்கிட்டாங்க அதுவும் இவருபொண்ண அம்மான்னுதான் கூப்புடும். இவரு பொண்டாட்டிய பாட்டின்னும் இவரத் தாத்தான்னும் கூப்புடும். அதுனால அவுக பக்கத்து ஊருக்குப் போனாக்கூட இவுக கிட்ட விட்டுட்டுப்போய்டுவாக அது பாட்டுக்கு இவுகவீட்டுல கெடக்கும்.

இதுக்கு நடுவுல ஆயிசாவப் பொண்ணுபாக்க வந்தாக . அவுகளுக்குப்பொண்ண ரொம்பப்புடிச்சிப்போச்சு. அப்ப ஸ்ருதி ஓடிவந்து அம்மான்னு இவளைக்கூப்புடவும் அவுக ஒருமாதிரி பாத்தாக . இது யாரு கொழந்தன்னு. அப்ப அது சொல்லிச்சி இதுதான் எங்க அம்மான்னு அவங்க முழிக்கிறதப்பாத்துட்டு இவரு சொன்னாரு அது எதிர்வீட்டுக்கொழந்த இங்கதானிருக்கும்ன்னு. அதுக்குள்ள அவளோட அம்மாபோயி ஸ்ருதியோட அம்மாவ கூட்டியாந்திருச்சு .அவ வந்து கொழந்தையக்கூப்புட்டா அது போகமாட்டேன்னு கத்துச்சு அப்ப அவங்க சொன்னாக இது எங்க மகதான் ஆனா ஆயிசாகூடத்தான் ஒட்டுதல் சாஸ்த்தின்னாக. பொண்ண நாங்க கூட்டிட்டுப் போகப் போறோமுன்னு சொன்னதும் அது வேணாம் என்கூடத்தான் இருக்கணும்ன்னு சொல்லிச்சி, எல்லாரும் சிரிச்சாக ஒருவழியா நிச்சயமும்பண்ணிட்டுப் போயிட்டாக கலியாணத்தேதியும் குறிச்சாச்சு. அது மார்கழிமாசம் தைல கலியாணம்முன்னு முடிவுமாயிப்போச்சு

அன்னிக்கி ஞாயத்துக்கெழம ஸ்ருதியோடகுடும்பம் பக்கத்து ஊருக்கு போகக்கெளம்புனாக . ஸ்ருதி ஆயிசாகிட்ட இருந்து போக மாட்டேன்னு அடம்புடிச்சது அதோட அம்மா அத முதுகுல ஒரு போடுபோட்டு அடம்பிடிக்காதன்னு அதட்டுனாக. அது அழுகைய அதிக மாக்கிடுச்சு. அப்ப ஆயிசா சொல்லிச்சி நீங்க போயிட்டுவாங்க ஸ்ருதி இங்கயே இருக்கட்டும் நான் பாத்துக்கிறேன்ன்னு சொல்லிச்சி அவங்களுக்கு மனசில்ல இருந்தாலும் அரமனசா விட்டுட்டுக்கிளம்பினாக ஸ்ருதி அவங்களுக்கு டாட்டா சொல்லிச்சி அதுகூடசேந்து ஆயிசாவும் டாட்டா சொல்லிச்சு அவுக போயிட்டாக

அவுக போனப்பின்னாடி இவரு ஆயிசாவும் ஸ்ருதியும் வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தாக. இவரு சம்சாரம் வீட்டுக்குள்ள ஏதோ வேலை பண்ணிட்டு இருந்துச்சு. இவங்க வீடு கடல்க்கரை ஓரமா இருந்துச்சு. இவரு வெளியபோயிருந்தாரு. அப்ப திடீருன்னு சனங்க ஓடுனாக. ஆயிசாவுக்கு ஒண்ணும் புரியல அதுக்குள்ள தெருக்குள்ள
கடல் தண்ணி வெள்ளமா உள்ள வந்துச்சு. ஆயிசா ஸ்ருதியக் காப்பாத்தப் பின்னாடி ஓடிச்சி. அது வெளயாட்டுப்புள்ள கடல்தண்ணிய நோக்கிஓடுச்சு ஆயிசா அய்யோ அய்யோன்னு கத்திட்டுப்பின்னாடி ஓடுச்சு, இந்த சத்தம் கேட்ட இவரு சம்சாரம் வெளிய ஓடிவந்து பாத்தப்ப ஆயிசாவும் ஸ்ருதியும் தண்ணில தத்தளிக்கிறதப்பாத்து அவுகளக்காப்பாத்தபின்னாடி
அதுவும் ஓடிச்சி ஆயிசா போய் ஸ்ருதிய புடிச்சி தூக்குச்சு அதுக்குள்ள போன கடல்தண்ணி திரும்ப வந்துச்சு தண்ணி இடுப்பளவு வரவும் இனி நம்மதப்பிக்க முடியாது கொழந்தையாவது பொழைக்கட்டும்னு தூக்கி ஓரமா வீசுச்சு ஸ்ருதிமேடேறிடுச்சு ஆனா தண்ணி அம்மாவையும் ஆயிசாவையும் இழுத்துட்டுப்போச்சு, அப்பத்தான் இவரு ஓடியாந்தாரு என்ன பண்ணுறதுன்னு தெரியாம போகாதீங்க போகாதீங்கன்னு கத்துனாரு ஆனா அதுக்குள்ள அவுக தண்ணில முங்கிட்டாக. இவரு பின்னால ஓடுனாரு அதுக்குள்ள அவரப் பக்கத்துல இருக்குறவுக புடிச்சி இழுத்து நிறுத்திட்டாக.ஸ்ருதிய ஓடிப்போயி புடிச்சிக்கிட்டாருஅவங்க தண்ணியோட போயிட்டாங்க
ஊரெல்லாம் ஒரே ஓலம் இதுபோல பலபேர கடல்தண்ணி இழுத்துடுச்சி சனங்க எல்லாம் ஊரைக்காலிபண்ணிஓடுனாக ஊருல ரொம்பப்பேரு இல்ல மீதமிருந்தவுக உயிரக்கைல புடிச்சிட்டு இருந்தாக கரையில அங்க அங்க பொணங்க ஒதுங்குச்சு. யாருக்கும் அழுகக்குட சத்தியில்ல இவரு பிரம்மபுடிச்ச மாதிரி ஒக்காந்துட்டாரு.

இதுக்குள்ள ஸ்ருதி யோட அம்மாவும் அப்பாவும் அலறியடிச்சிட்டு ஓடியாந்தாக வந்து பாத்தா ஒண்ணும் புரியல அவுகளைப்பாத்ததும் இவரு அழுதுக்கிட்டே. கையக் கடல்பக்கம் காட்டுனாரு. ஸ்ருதி அவர இருக்கக்கட்டிப்புடிச்சிட்டு அழுதுட்டு இருந்துச்சு ரெண்டுபேரும் ஓண்ணு வாய்விட்டுக்கதறுனாக . பக்கத்துல இருந்தவுக எல்லாம் பாடிகளைத்தேடுனாக தகவல் எதும்கெடைக்கல
இதுக்கு நடுவுல செலபேரு தப்பிச்சிட்டதா தகவல் வந்துச்சு ஸ்ருதி யோட அம்மாவும் அப்பாவும் அழுதுட்டே இருந்தாக ராத்திரியாகிப்போச்சு. அப்ப மைக்கு வச்சி சொன்னாக யாரும் இங்க இருக்கவேணாம்.இதுசுனாமி திரும்பத்தண்ணி வந்தாலும் வரும்ன்னு ஆனாலும் இவங்க எங்கயும் போகல .ராத்திரிப்பூராம் நரகமாப்போச்சுயாருயாரத்தேத்துறதுன்னு புரியல.
ஒருவழியா விடிஞ்சது. அப்ப ஒருத்தரு ஓடியாந்து சொன்னாரு கடல்கரையில செல பாடிங்க ஒதுங்கியிருக்கதா. அலறியடிச்சிட்டு இவுக ஓடுனாக அங்க ஒரு கூட்டம் நின்னுட்டு இருந்துச்சு கூட்டத்த வெலக்கிப்பாத்தா. அய்யோ அத எப்புடிச்சொல்றதுன்னுதெரியல ஆயிசாவும்
ஆயிசாவ இறுக்கிப்புடிச்சபடி இவரு சம்சாரமும் பொணமாக்கெடந்தாக. எல்லார்கண்ணுலயும் கண்ணீர் ஊத்துச்சு. யாராலயும் அதத்தாங்க முடியல அதுபோல அங்க அங்க பாடிக கெடந்துச்சு.. விழுந்துபொறண்டு அழுதாரு அப்துல்சமது அவர யாராலயும் சமாதானப்ப்டுத்த முவிழியோரம்டியல
அவருவாய் போகாதீக போகாதீகன்னு சொல்லிட்டு இருந்துச்சு.. .கண்ணுமுன்னால கலியாணம் நிச்சயமான மகளும் சம்சாரமும் பொணமானத இவரால தாங்க முடியல..ஸ்ருதியோட அம்மாவும் அப்பாவும் அவளக்காப்பாத்துனதுக்கு எப்புடி நன்றி சொல்றது அவருக்கு எப்புடி ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம அழுதுக்கிட்டே இனிமே இவதான் எங்களுக்கு ஆயிசா ந்னு சொல்லிட்டுப் போயிட்டாக நம்பிக்குடுத்த கொழந்தையக்காப்பாத்த தன்னோட உசிறக்கொடுத்த மகளையும் சம்சாரத்தயும் நெனச்சி இவரு இப்புடிஆகிட்டாரு தண்ணில ஆரு எறங்குனாலும் இப்புடித்தான் தடுப்பாருன்னு,
அவரு சொல்லி முடிக்கும்போது தலையிலயும் கைலயும் ரத்தம் ஒழுக ஆயிசாஆயிசான்னுசொல்லிக்கிட்டுஅப்துல்சமது போய்க்கிட்டு இருந்தாரு தனியா .. அதைப்பாத்து எல்லார் கண்ணும் கலங்கியிருந்துச்சு. எல்லாரும் கண்ணதொடச்சிக்கிட்டாக...
கவிச்சிகரம் .முத்துவிஜயன்


No comments:

Post a Comment