Friday 3 April 2020


மனசு(சிறுகதை)
அவனுக்கு ஒரே தங்கச்சிதான் . அப்பா அம்மாவெல்லாம் போய்ச்சேந்துட்டாக
சின்னப்புள்ளயா இருக்கும்போதில இருந்து வளத்ததுனால அவமேல உசிற வைச்சிருந்தான் அப்பத்தான் பட்டிணியா இருந்துகூட அவளுக்கு சாப்பாடு குடுத்து வளத்துருக்கான்.அம்மா அப்பா இல்ல அந்த நெனப்பு வந்துறக்கூடாதுன்னு கவனமாப் அவளப் பாத்துக்கிட்டான்.அவள மகமாதிரி வளத்தான் . அவளுக்கு ஒண்ணுனா தாங்கமாட்டான்.பண்டிகைக்கு துணிமணி எடுக்கப்போனாக்கூட அவளுக்குப்புடிச்சத எடுத்துக்குடுத்துட்டு மீதிஇருக்குறதுலதான் அவனுக்கு வாங்கிக்குவான். அவ என்ன கேட்டாலும் எப்பாடு பட்டாவது வாங்கிக் குடுப்பான் அவளும் எப்பயுமே சிரிச்சிட்டே இருப்பா . அது அவனுக்கு ரொம்பப் புடிக்கும்.அவனுக்குஅதப்பாத்துட்டேஇருக்கனும்அவ்வளவுதான்.
அதுக்காக கஸ்ட்டப்பட்டு ஒழைச்சான்
அவளைக்கலியாணம் செஞ்சிகுடுக்க காசுசேத்தான்.அவளுக்கும் அவனுக்கும் பத்து வருச வயசுவித்யாசம் அதுனால அவனுக்கு அவ எப்பயும் கொழந்ததான்
இதுக்கு நடுவுல சொந்தக்காரரு ஒருத்தரு இவனுக்கு பொண்ணு குடுக்க வந்தாரு இவனோட ஒழைப்பப்பாத்துட்டு
இவன் வேணாம் என் தங்கச்சிகலியாணம் முடிஞ்சுதான் எனக்கு எல்லாமுன்னான்,
அப்ப அவருசொன்னாரு அதுக்குள்ள நீ கெழவனாயிடுவ. நீ கலியாணம் பண்ணிட்டா அவள நல்லாக் கவனிக்கலாம்
என் மககிட்டப் பேசிட்டேன்அவளும் வேலைக்கிப்போயிசம்பாரிக்கிறா அவளும் ஒனக்குத்தொணையா இருப்பான்னாரு
இவன் அவகூட பேசனும்ன்னான் அவளும் நல்ல பொண்ணாத்தானிருந்தா. உங்களுக்குத்தங்கச்சின்னா எனக்கு அவ மக நான் உங்களுக்குத்தொணையா இருப்பேன்னா. கலியாணமும் முடிஞ்சது
அவனோட சம்சாரம் என்னமோ அவகூட ப்
பாசமாத்தானிருந்தா, ஆனா இவதான் அவகூட ஒட்டவே இல்ல. இவ மகளேன்னு பாசமாக்கூப்புட்டலும் அவ மதிக்கிறது இல்ல. அண்ணனுக்கும் இவளுக்கும் இருக்குற சொவராத்தான் இவள அவ நெனச்சா. ஆனாலும் இவ அதப்பெருசா எடுத்துக்கல வீட்டு நிர்வாகம் அண்ணி கைல போனது இவளுக்குப் புடிக்கல
ஒண்ணொன்னுக்கும் அவகிட்டக் கெஞ்சனுமான்னு ஒரு கோவம் அதுனாலஎதுவேணுமுன்னாலும் அண்ணன்கிட்டத்தான் கேப்பா அதை இவ வாங்கிக்குடுப்பா. ஆனா அவ அண்ணன் கிட்ட தேங்க்ஸ்சொல்லுவா ...இவகிட்ட எதுவும் சொல்லமாட்டா இம்புட்டுக்கும் அது இவகாசுல வாங்குனதா இருக்கும்
அப்புடித்தான் அவளுக்குப்புடிச்சி ஒரு கைப்பை வாங்கிட்டு வந்தா. அது ரொம்ப நல்லாருந்துச்சு. அதப்பாத்துட்டு அதுதான் வேணுமுன்னு அண்ணன் கிட்ட இவ சொன்னா. அவனும் அவள எடுத்துக் கோன்னுட்டான். இதுல அண்ணிக்கிக் கோவம் வந்துருச்சு ஏங்க நான் ஆசையா எனக்காக வாங்கிட்டு வந்தது என்கிட்ட சொல்லிருந்தா நானே குடுத்துருப்பேன் ன்னா. அவன் சொன்னான்சின்னபுள்ள பாவம் நீ வேற வாங்கிக்கோன்னுட்டான்
புடவை எடுக்கபோனாலும் அப்புடித்தான் இம்புட்டுக்கும் அவவிருப்பத்துக்கு அவளுக்கு எடுத்துக்குடுத்துட்டுத்தான் அண்ணி தனக்கு எடுப்பா. வீட்டுக்கு வந்ததும் அண்னியோட பொடவதான் வேணும்ன்னு அண்ணன் கிட்டவாங்கிடுவா. இத அங்கயே சொல்லலா முல்லன்னா
அதுசின்னப்புள்ள அதுக்கு என்ன தெரியும்ன்னு அவன் சொல்லிடுவான்
இதுக்கு நடுவுல அவள அண்ணி ஒருநா ஒருத்தன் கூட பைக்குல போறதப்பாத்தா
அன்னிக்கே வந்து புருசன்கிட்டச்சொன்னா
அவன் தங்கச்சியக்கேட்டதுக்கு அவசொன்னா அவன் பிரண்டோட அண்ணன் அவசரத்துக்கு ஒதவி பண்ணான் . இதப்பெருசாக்குறதுக்கே அண்ணி உன்கிட்ட பத்தவைக்கிதுன்னா
அவனும் சின்னப்புள்ள அதுக்கென்ன தெரியும்ன்னான்.ஆனா அண்ணி நெனச்சது உண்மையாப்போச்சு ஒருநா அவ அவன்கூடஓடிப்போயிட்டா, இவனால தாங்கமுடியல எல்லாத்தையும் சொன்னா இத மறைச்சிட்டாளேன்னு கோவமாயிட்டான் ஒவ்வொன்னும் பாத்துப்பாத்துசெஞ்சனேன்னு பொலம்புனான்ஒடஞ்சிபோயிட்டான்
அவ போன் பண்ணப்ப பேசக்கூட மாட்டேன்னுட்டான். இவ எவ்வளவோ சமாதானப்படுத்துனா. அவன் சமாதானமாகல. அவளுக்கு என்ன கொறை வைச்சேன் இப்புடிப்பண்ணிட்டாளேன்னு அழுதுக்கிட்டே கெடந்தான் அப்ப இவதான்
அவனச்சமாதானப்படுத்துனா. மூணுமாசமாயிப்போச்சு. நடந்தது நடந்துபோச்சு போயிப்பாத்துட்டாவது வருவம்ன்னா. அவனும் அரமனசா ஒத்துக்கிட்டான் தங்கச்சிக்கிப்போன் போட்டுச்சொன்னா. அவ வேணாம் இங்க வராதீகன்னா...
ஆனாலும் போனாக பாத்தாலே தெரிஞ்சது அவநெலம. பாத்துட்டு அண்ணனக் கட்டிப்புடிச்சி அழுதா. அவனும் அழுதான் இப்புடி ஏமாந்துட்டயேன்னு...இருங்க காபி போடுறேன்னு சமயக்கட்டுக்குள்ள போனா
அங்க ஒண்ணுமே இல்ல இருங்கவாறேன்னு வெளிய போனா அப்ப அண்ணி சமயக் கட்டப்பாத்துட்டு கண்ணுகலங்குனா
அதுக்குள்ள அவ திரும்பி வந்து காபிபோட்டுக்கொண்டுவந்தா. அண்ணேன் மன்னிச்சிடுங்க அண்ணனும் தங்கச்சியும் மாத்திமாத்தி அழுதாக இவள
அப்பக்கூட அவ கண்டுக்கவே இல்ல ஒண்ண சிரிச்ச மொகத்தோடவே பாப்பனே
அது எங்கபோச்சுன்னு கண்ணீர் விட்டுட்டு இருந்தான் அவளும் அவன் கூட பேசிட்டு இருந்தாக
அப்ப வாசல்ல ஒருத்தன் வந்து நின்னான்
என்னான்னு கேட்டதுக்கு பலசரக்கு ஆடர்பண்ணிருக்கு இந்த அட்ரெஸ்தானான்னு பாருங்கன்னு சீட்டக்குடுத்தான் ஆமா இந்த அட்ரஸ்தான்
உங்கவீட்டுக்காரரு ஆடர் பண்ணி ருக்காருன்னு சொன்னான். அவளுக்கு ரொம்ப சந்தோசம் பாருண்ணே அவரு சொல்லாமக்கொள்ளாமப்பண்ணிட்டாரு
காசுன்னு இழுத்தா. அப்ப சரக்குக் கொண்டுவந்தவன் சொன்னான் அதெல்லாம் ஆன்லைன்ல பெமண்ட்டாயிடுச்சு. ன்னு சொல்லிட்டு எறக்கிவைச்சிட்டுப்போயிட்டான்
அப்ப தங்கச்சி சொன்னா அண்ணே இருந்து சாப்புட்டுட்டுபோங்க சமைக்கிறேன்னான்
இவனும் சரின்னான்.அப்பக்கூட அண்ணிபக்கம் திரும்பல இவன் பாவம் சின்னப்புள்ளன்னான்
சாப்பாடு தயாராயிடுச்சு, சாப்புட வாங்கன்னு கூப்புட்டா.ரெண்டுபேரும் சாப்புடபோனாக அண்ணன விழுந்து விழுந்து கவனிச்சா. இவள பேருக்குக்கவனிச்சா. அதுக்குள்ள அவளோட புருசன் வந்துட்டான்
அவனுக்கு ஒருமாதிரியாப்போச்சு அடுப்படில எறங்கிருக்க பொருளெல்லாம் பாத்துட்டு அவளக்கேட்டான் யாரு வாங்கியாந்ததுன்னு அவளுக்கு அதிர்ச்சி நீங்கதான்ஆடர்பண்ணுனதாகொண்டாந்து எறக்குனாகன்னா. அவன் நா எப்பப் பண்ணுனேன் எனக்கு ஒண்ணும் புரியலன்னான்.
அதுவரைக்கும் பேசாம இருந்த அண்ணி சொன்னா நாந்தான் பண்ணுனேன்
அடுப்படில பாத்து நெலவரம் தெரிஞ்சிக்கிட்டேன் ஆன்லைன்ல ஆடர் பண்ணுனேன். ஒருபொண்ணோட கஸ்டம் ஒருபொண்ணுக்குத்தான் தெரியும்
அவ காபி குடுக்கவே செரமப்பட்டதப் பாத்தேன் என்ன இருந்தாலும் அவ என்ன அம்மாவா ஏத்துக்காட்டாலும் நான் மகளாத்தேன் பாத்தேன் .அவளால அண்ணன சாப்புடச்சொல்லமுடியாத சூழ்நிலயப் புரிஞ்சிக்கிட்டு இதநான் செஞ்சேன்னுசொன்னதக்கேட்டதும் தங்கச்சி கண்ணுல இருந்து கண்ணீர் ஊத்துச்சு.
அண்ணி என்ன மன்னிச்சிடுங்க ஒங்களத்தவறாப் புரிஞ்சிக்கிட்டு அவமானப்படுத்திருக்கேன் ஆனா அதையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு என்ன மகளாப்பாத்த நீங்க இந்த மகள மன்னிச்சிடுங்கன்னு கண்ணீர்விட்டுக் கால்ல விழுந்தா,.அப்ப அண்ணன் கண்ணுல இருந்தும் கண்ணீர் ஊத்துச்சு இப்பவாவதுஅண்ணியப்புரிஞ்சிக்கிட்டாலே நாமலும் தப்புப்பண்ணிருக்கோமுன்னு கண்ணீர் விட்டான்.........
கவிச்சிகரம் .முத்துவிஜயன்


No comments:

Post a Comment