Friday 3 April 2020


நம்ம ரெங்கன் இருக்கானே ஒடம்புபூராம் குசும்பு கிண்டல்கேலிநையாண்டி...சேட்டை

இதோட மொத்த உருவம்தான் அவன். வடிவேலு சாட,சந்திரபாபு ஒடம்பு வாகு எப்பவுமே சிரிச்ச மொகம் . யாரு அவனிகிட்ட மாட்டினாலும் செத்தானுக. வைச்சி செஞ்சிருவான். நம்ம சுப்பக்கா கதையில லல்லே லாலா கடையத் தேடிப் போயி டீக்கடையப் பாத்துப்புட்டு சுப்பக்காவக்கழுவிஊத்துனதுஇவனேதான்.

அதுக்கப்புறம் சுப்பக்கா இவனப்பாத்தாலே எஸ்கேப்புதான். சுப்பக்காவுக்கு இவன் வைச்சபேரு சுப்பாத்தாஸ்....இங்கிலீஸ்

இவனும் அவனோட பிரண்டும் வெளாடிட்டு இருக்குறப்ப ரெண்டுபேருக்கும் சண்ட மூண்டுடுச்சு. ரெண்டுபேரும் மாறி மாறி கல்லெடுத்து எறிஞ்சிக்கிட்டானுக

அப்ப இவன் பிரண்டு அவசரத்துல எதையோ எடுத்து எறியப்போக அது காஞ்சுபோன மாட்டுச்சாணியாப்போச்சு

சிக்குனான் இவன்கிட்ட அன்னில இருந்து அவனப்பாக்குறப்ப எம் எஸ் தூக்கின்னு பேருவைச்சிட்டான் அதாவது மாட்டுச்சாணிதூக்கியாம். அதைச் சொன்னாலே அவன் டென்சனாகி தொறத்திதொறத்தி அடிப்பான் இவனும் கிண்டல விடமாட்டான்

ஒருநா இவன் நாடகம் பாக்கப்போனான் கட்டப்பொம்மன் நாடகம். அதுல ஒருபாட்டுவரும் கறந்தப்பால காகம் குடிக்காது கட்டப்பொம்ம துரை பேருசொன்னான்னு வரும்

இவன் அதையே மாத்திப்பாடுனான் சுண்ணாம்புச்சட்டிய நாயி நக்காது அய்யா ரெங்கனோட பேருசொன்னான்னு

எல்லாரும் சிரிப்பாக ஒருநா இவன் சொந்தக்காரர் வீட்டுக்குப்போனான்

அங்க பொண்டாட்டி டிவி பாத்துட்டு இருக்க புருசன் பாத்திரங்களை கழுவிட்டு இருந்தாரு அவரு நல்லாப்பாடுவாரு

கூட்டத்துல அவரு பாடிக்கிட்டு இருந்தாரு

அப்ப திருவிளையாடல் படம் வந்த நேரம்

ஒருத்தர் இவரப்பாராட்டுறதா நெனச்சிக்கிட்டு பானப்பத்திரர் நேர வந்தமாதிரி இருக்குன்னார், ரெங்கன்

சும்மா இருப்பானா. எனக்குப் பத்துப்பாத்திரர் வந்த மாதிரில இருக்குன்னா சிரிச்சிக்கிட்டே

பாடகர் மொகம் வெளிறிப்போச்சு

ஒருநா இவங்க ஊர்க்காரன் டவுனுக்கு போனவன் சூ வெல கம்மியாருக்குன்னு வாங்கியாந்துட்டான் .வீட்டுக்கு வந்து போட்டுப்பாத்தா ஒருகாலு சேருது இன்னோன்னு சேரல. ரங்கனா அதப்பாத்துத்தொலைக்கணும். ரெண்டுசூவுமே வலதுகாலுக்குண்டானது அதான் செட்டாகல ரெங்கன் அவனப்பாத்துச்சொன்னான் லெப்டு ரைட்டுதெரியாதவனெல்லாம் சூவாங்கப்போனா ரைட்டாதான் வாங்குவான்னான். அப்புறம் கேப் விட்டுச்சொல்லுவான் அவனுக்கு லெப்டு புடிக்காதுன்னு... அதுனால அவனுக்கு ரைட்டோ ரைட்டு ந்னு பேருவைச்சான்

ஊருல ஒரு அம்மா இருந்துச்சு அதுக்கு மைனான்னு பேரு அவபுருசன் இவள விட்டு ஓடிப்போயிட்டான் அதப்பாத்தா இவன் சொல்லுவான்கிளிக்கிறெக்கமொளைச்சிடுத்து, மைனாவ விட்டுப்பறந்துடுச்சு ம்பான் சிவாஜி பாணில. அப்புறம் அதைச்சொல்லுவான் மைனா உன்கிட்ட ஒருவேளை சாப்புட்டவன் மானஸ்த்தனா இருந்தா திருப்பிவருவானாஅதான் உன் புருசன் வரலம்ம்பான் அவ கல்லெடுத்து எறிவா

இவன் பிரண்டு ஒருத்தன் கொஞ்சம் வசதியானவன் கரகாட்டம் பாக்கப்போனான். போன இடத்துல கொஞ்சம் உணர்ச்சிவசப்ப்ட்டு கரகாட்டக்காரிக்கு 50 ரூவா சட்டையில குத்துனான். ரங்கன் கண்ணுல மாட்டிடுச்சு

அவனுக்குப்பெயர்வைச்சான் கரகத்துல கெரகம்ன்னு....ரெங்கனுக்கு அப்பா கெடையாது அவனோட அம்மாவை இப்புடிக்கதையாச்சொல்லி சிரிக்கவைப்பான். அம்மா பாவம் எங்கப்பா எந்த சந்தோசமும் குடுக்கல .அதான் என்னால முடிஞ்ச அளவுக்கு சிரிக்கவைக்கிறேன்பான்.

சுப்பக்காவுக்கு எப்புடி சிவாஜியப் புடிக்குமோ அதுக்கு நேரெதிர் ரங்கன் . இவனுக்கு எம் ஜி யாரைத்தான் புடிக்கும் சிவாஜி அழுகுணிப்பய வீரம்ன்னா எங்க எம் ஜி யார்தான் ப்பான். இவனுக்கும் சுப்பக்காவுக்கும் நடுவுல எம்ஜியாரும் சிவாஜியும் படாதபாடுபடுபடுவாக .சுப்பு எம்ஜியாரக்கழுவிஊத்தஇவன்சிவாஜியக்

கழுவி ஊத்த பாக்குறவுகதான் சண்ட வெளக்கிவிடனும்

தெருவுல காய்கறி ஐஸ் விக்க வாரவனுக கூட இவன்கிட்டத்தப்பிக்க முடியாது

அவனுக வரும்போது அவனுக மாதிரியே கப்பைஸ் பாலஸ் ந்னுகத்துவான் அவுகளே அசந்துடுவாக....

தெருவுல பாடி பில்டிங் பண்ண எல்லாரும் வந்து எக்சசைஸ் பண்ணுவானுக முட்ட கிட்டஎல்லாம் குடிச்சிட்டு வெயிட்ட தூக்கி பாடி பில்டு பண்ணுவானுக அவனுக முன்னாடி ரங்கன் போயி நின்னுக்கிட்டு

ஒரு வெளக்க மாத்துக்குச்சிய கைல எடுத்துக்கிட்டு சிரமப்பட்டுத்தூக்குறமாதிரி கிண்டல் பண்ணுவான் அவனுக அடிக்கத்தொறத்துவானுக. இவன் சிட்டாப்பறந்துடுவான். பொம்வளைப்புள்ளைக தெருவுல ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்கும் இவன் பின்னாடிபோயி சடைய சேத்துக்கட்டிப்புடுவான் ரெண்டும் முட்டிக்கும். இவன அடிக்கத்தொறத்தும்

அதேமாதிரிஒருநா பொம்பளைக கொழாயடில சண்டபோடுபோது ஒருநா 100க்குப்போன் பண்னிட்டான். தெருவுல கலவரம்ன்னு. வந்த போலீசு பாத்துப்புட்டு கொழாயப்புடிக்கிட்டுப்போயிடுச்சு

இவந்தான் ந்னு தெரியாமத்திட்டிட்டு இருந்தாக, எந்த எடுபட்டபய செஞ்ச வேல இதுண்ணு. இப்புடி தெருவக்கலக்கிட்டு இருந்த ரங்கன் ஒருநாமூட்டப்பூச்சி மருந்தக்குடிச்சி செத்துப்போனான் கடன் தொல்லயால .அன்னிக்கி இவன் கிண்டல் பண்ண எல்லாராலயுமே தாங்க முடியல

அவனப்பாத்தா ஒரு சந்தோசம் வரும் அதுக்காகவே அவன்கிட்ட வம்பிழுப்போம்

பாவம்ன்னு கண்ணு கலங்குனாக

அவனோட அம்மா எனக்கிருந்த ஒரே சந்தோசமும் உனக்குப்புடிக்கலயா கடவுளேன்னு அவன மடில தூக்கிப்போட்டு அழுதா.... அப்பயும் ரங்கனுடய மூஞ்சி

கிண்டலாச்சிரிக்கிற மாதிரியே இருந்துச்சுசுப்பக்கா வந்து அழுதா யாருகூட நான் சண்டபோடப்போறேன்னு.....பாக்குறவுக கண்ணு கலங்கிடுச்சு.......

கவிச்சிகரம் .முத்துவிஜயன்

No comments:

Post a Comment