கண்ணாமூச்சி விளையாட்டாய் 
நீள்கிறது நம்கவிதைகள் 
பாவனைகளில் திமிருகின்றது
காதல் கைக்கு பிடிபடாமலே 
மழுப்பல்களில் மருகுகின்றது மனம் 
கவிதைவரிகளுக்குள்ளே
மெல்லியகோடாக வழிகின்றது
நம்விருப்பங்கள்
புரிந்தும் புரியதத்துபோல்
செய்யும் பாசாங்குளில்
பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது
நமதுபுனிதமான புரிதல்கள்..
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment