Sunday, 22 September 2013
A Muthu Vijayan Kalpakkam
உனது சின்னசிரிப்பு கூட
எனது மனஅமைதிக்குளத்தில்
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை
வரிசையாக உருவாக்கிக்கொண்டு
அத்தனை அலைகளிலும்
ஆடிகொண்டிருக்கின்றது
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும்
வெப்பதுளியான உன்னை
எனது ஆன்மா
தேடி அலைகிறது
யுகங்களைத்தாண்டி
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும்
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு
வெடித்து முளைக்கின்றன
கவிதை விருட்சங்கள்
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில்
இருந்தும் முளைக்கின்றன
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் நீர்குமிழ்களாக
பொங்கிவருகின்றன பொன் பொழுதுகள்....
Subscribe to:
Posts (Atom)