மனம் பதைபதைத்தது
எப்படியும்
எப்படியும்
கண்டுபிடித்துவிடுவார்கள்
எவ்வளவு
துவைத்துப்போட்டாலும்
காட்டிக்கொடுத்துவிடுகிறது
இந்தக்கிழிசல் சட்டை
டவுசர்கிழிசல் உட்கார்ந்தால்
மறைந்துவிடுகிறது
அந்தமுறுக்குமீசைக்காரணுக்கு
என்னை நன்கு தெரியும்
அவர் பார்ப்பதற்குள்
பாப்பாவுக்காவது ஒருவாய்
ஊட்டிவிடலாமென்றால்
“டேய் எழுந்திருடா
நாயே
யார்ரா இந்தபிச்சைக்காரனை
பந்தியில்
உள்ளே விட்டது........”
No comments:
Post a Comment