Tuesday, 31 March 2015

திருவிழாவுக்கு
அம்மாவீட்டிலிருந்து
அழைப்பு
வழக்கம்போல் 
விடுமுறை இல்லைகணவருக்கு
(அல்லது )வரவிருப்பமில்லை
அம்மாவைப்பார்க்கும் 
ஆசை ஒருபுறம்
தோழிகளைப்பார்க்கும்
மகிழ்வு ஒருபுறம்.....
வழிஅனுப்பும் கணவரின் 
முகத்தில் 
நிச்சயமாக வருத்தமில்லை
ஊரின் எல்லையே 
கண்ணீருடன் 
வரவேற்றது தூறலுடன்
அம்மாவர்வேற்றாள்
அன்புநீர் கண்களில் வழிய
தன் வயதுக்கு முடியாத
விதம் விதமான சமயலுடன்
தம்பி வரலியா என்ற வருத்ததுடன்
அம்மா அதெல்லாம் 
இருக்கட்டும் 
உனமடில படுத்துக்கவாம்மா
அப்புறம் மீதிஎல்லாம்
சாப்பிட்டு படுதுக்கடி...
வேணாம் உன் மடி
போதும்மா,,,,,,,
போய் சேர்ந்தாளா 
இல்லையா என்று
கவலைப்படாத
கணவனை நினைத்து
கண்ணீர் வழிந்தது
அம்மா என்னம்மா
என்றாள்....
உன்னை மிஸ்பண்றேன் மா.....
என்றேன் 
வாழ்க்கையயும்
என்று மனதில் சொல்லியபடி...........

No comments:

Post a Comment