Monday, 23 March 2015

எங்கள் குலவிளக்கே
அனிச்சமலரே
உன்னைக்காணும்
போதெல்லாம்
கொள்ளைபோகுதடி
என் மனது
அழகானபொற்சிலையே
என் குருதியில்
வரைந்த சித்திரமே
என் அழகுபிரதியே
உன் வாயால் 
அம்மா என்றழைக்கும்
அற்புதத்
தருணத்திற்காகத்தான்
ஆண்டுகள் பல
தவமிருந்தேன்...
மலடி என்ற
அவப்பெயரை
உன் அம்மா என்ற
அழைப்பினால்
களைந்தெறிந்த
கற்பகமே......
கண்ணீர் பொங்குதடி
உன்னைக்காணும் 
போதெல்லாம்

No comments:

Post a Comment