எத்தனை பள்ளிகள்
எத்தனை கல்லூரிகள்
படித்தாலும்
ஒன்னாப்பு டீச்சர்போல்
யாரையும் பார்க்கவில்லை
பக்கத்துவீடுதான்
வீட்டுக்கு வந்தால்
அத்தை பள்ளியில்
ஆசிரியை....
உட்காரநாற்காலி
இல்லாதபள்ளி
தரையில் கால்நீட்டி
அமர்ந்து பக்கத்தில்
உட்காரவைத்து
அ...ஆ எழுதச்சொல்லிக்
கொடுப்பாங்க
மதிய இலவச உணவில்
கூடுதலாக எனக்கு
ஒரு கரண்டி கிடைக்கும்
அவங்கசார் 3வகுப்பு
வாத்தியார்....
பிள்ளைகள் படிக்கலைனா
காதைபிடித்துதிருகுவார்
ஆனால் டீச்சர் ஆரஞ்சு
முட்டாய் தருவேன்
என்றுசொல்லியே
படிக்கவைத்துவிடுவார்
எனக்கு பட்டணத்தில்
வேலைகிடத்ததும்
அவர்களின் ஆசி
வாங்கபோயிருந்தேன்
கொஞ்சம் பொறு
என்று உள்ளே
சென்றடீச்சர்
குளித்து ஈர உடையுடன்
சாமிகும்பிட்டு
வந்து விபூதியிட்டு
நல்லாவருவடா என்றார்
கண்கள் கலங்கின,,,,,
எனக்கு....காலில்விழுந்தபோது
எத்தனை கல்லூரிகள்
படித்தாலும்
ஒன்னாப்பு டீச்சர்போல்
யாரையும் பார்க்கவில்லை
பக்கத்துவீடுதான்
வீட்டுக்கு வந்தால்
அத்தை பள்ளியில்
ஆசிரியை....
உட்காரநாற்காலி
இல்லாதபள்ளி
தரையில் கால்நீட்டி
அமர்ந்து பக்கத்தில்
உட்காரவைத்து
அ...ஆ எழுதச்சொல்லிக்
கொடுப்பாங்க
மதிய இலவச உணவில்
கூடுதலாக எனக்கு
ஒரு கரண்டி கிடைக்கும்
அவங்கசார் 3வகுப்பு
வாத்தியார்....
பிள்ளைகள் படிக்கலைனா
காதைபிடித்துதிருகுவார்
ஆனால் டீச்சர் ஆரஞ்சு
முட்டாய் தருவேன்
என்றுசொல்லியே
படிக்கவைத்துவிடுவார்
எனக்கு பட்டணத்தில்
வேலைகிடத்ததும்
அவர்களின் ஆசி
வாங்கபோயிருந்தேன்
கொஞ்சம் பொறு
என்று உள்ளே
சென்றடீச்சர்
குளித்து ஈர உடையுடன்
சாமிகும்பிட்டு
வந்து விபூதியிட்டு
நல்லாவருவடா என்றார்
கண்கள் கலங்கின,,,,,
எனக்கு....காலில்விழுந்தபோது
No comments:
Post a Comment