Monday, 23 March 2015

அன்று அவன் வீட்டிற்கு
அம்மா கடன் வாங்கி
வரச்சொல்லியிருந்தாள்
அவன் இருக்கும்போது
கடன் கேட்க சங்கடமாக
இருந்தது
8மணிக்கு டியூசனுக்கு
அவன் போகும் நேரத்தைத்
தேர்வுசெய்தேன்
நான் போனநேரம்
அவனே எதிர்கொண்டான்
என்னடா எங்கவீட்டுக்கு என்று
என் முகம் வியர்த்தது
காபி சாப்பிடுடா
என்று காபிவேற அம்மாவிடம்
வாங்கிக்கொடுத்தான்
அப்புறம் என்னவேலையா வந்தாய்
என்றான் 
மென்று முழுங்கி 
சும்மாவந்தேன்வறேன் 
என்றுசொல்லித்திரும்பினேன்
உள்ளே அவன் அம்மாவின்
குரல் கேட்டது
”நல்லவேளை நீ இருந்த
காபியோடபோச்சு”
காபி அதிகமாகக் கசந்தது.....
நெஞ்சுவரை......
Unlike ·  · 

No comments:

Post a Comment