வண்ணங்களைப்பற்றிய
பிராங்ஞை இல்லாமல்
வாழ்க்கை பற்றிய
சிந்தனைகளுடன்
வாழ்கிறது வண்ணத்துபூச்சி...
தன்னைப்பற்றிய
கவிதைகளைகடந்தபடி
வண்ணமலர்களையும்
தேன் குடங்களாக மட்டுமே
தேடி ருசித்தபடியும்
தனது அடுத்த
வாரிசுகளை உருவாக்கும்
கனவுடனும்
காதல் வயப்பட்டபடி ,,
அடுத்தவேளைஉணவைபற்றியும்
வீடுகட்டித்தங்கும்
கவலைகள் அற்று,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment