Thursday, 16 October 2014

தனிமை இருளில்
தகித்து உருகுகின்றது
தனல் உடல் மெழுகாகி
ஆறாகிவிழிகிறது
காய்ந்தவிழிநீர்...
காற்றாகிகலைகிறது
நீரில்நீர் கரைவதுபோல்
ஒவ்வொருஅணுவும்


தகிக்கிறதுவியர்வை
வழிந்தும் அனலாய்
மின்னலாய் வந்துபோகும்
உன்கள்ளசிரிப்பு
பற்றவைத்துசெல்கிறது
தீ பந்தாக உடலெங்கும்
பாலையாகபிளந்து
கிடக்கும் இதழ்கள்
வெடித்துகுருதி
கொப்பளிக்கிறது
அலையானகூந்தல்
முட்புதராய்சிக்கிகிடக்கின்றது
மனம்மட்டும் மறுகிக்கிடக்கின்றது
உன்னைசுற்றும் காற்றாய்

No comments:

Post a Comment