சுயங்களை தொலைத்த
வனப்பிரதேசங்களில்
ஈரங்களை தேடியபடி
அலைகிறதுகாற்றாய் மனது
கொன்று...
புதைக்கப்பட்டிருக்கும்
முதுமரங்களின் வேர்கள்
அடியில் சுயவிலாசங்களைத்
தேடுகிறது
பச்சைவாசனை
நுகர்ந்தபடியே
உறங்கிக்கிடக்கும்
வன்மங்களைப் புதுப்பித்தவாறு
இயல்பாய் வரும் பாவங்களின்
முகமூடி அணிந்தவாறு
மிதித்து உயிர்பறிக்கும்
செயல்களுடன்
என்றேனும் கனவுகளின்
பிம்பங்களையாவது
நேரில் கண்ணுரும் ஆவலுடன்........
No comments:
Post a Comment