Thursday, 16 October 2014

மரணத்தின் நிழலில்
வாழ்க்கை நகர்கிறது
அட்டைகளுக்கு இடையில்
புரட்டப்படும் பக்கங்களாய்
வாசிக்கநேரமில்லாமல்...
பிரிதல்பேச்சுகொடுக்கும்
நேரத்தை புரிதலுக்கு
கொடுக்காமலே.....
விரல்களின் வருடல்கள்
வார்த்தைகள்தொடாமலே
பக்கங்களைமட்டும் நகர்த்தியபடி
கண்ணீர்பக்கங்கள்கூட


ஈரமின்றி நகர்த்தபடுகின்றன
மகிழ்வின் நேரங்களும்
முகபாவமாற்றங்கள்
இல்லாமலே...
முகம் மூடிக்கதறவைக்கும்
மூர்கதனங்கள் முனறிவிப்பின்றி
முன்னேறிசெல்வதும்
ரணம்காயாதபோதும்
பிறாண்டல்களாய்
கடைசிப்பக்கத்தை
தொட்டு அட்டைகடக்கும்
ஆதங்கம் ஏதுமில்லாமல்
கிழிகிறது புத்தகம்.......

No comments:

Post a Comment