வேட்ககை நெருப்பு
என்னைச்சுட்டெரிக்க
உஸ்ணபெருமூச்சு
தகிக்க வேதனையில்
செத்துக்கொண்டிருக்கின்றன
என் செல் ஒவ்வொன்றும்.......
எங்கிருந்தோ பற்றவைக்கிறாய்
நெருப்பை என்மீதில்
உடுத்தும் ஆடைகளே
உறுத்தும்கொடுமையில்
உன் நினைவேஎன்னை
கிரியாஊக்கியாக
உள்ளிருந்துஉஸ்ணமுயர்த்த
ஏனிப்படி வதைக்கிறாய்
என்னுயிரே......
No comments:
Post a Comment