உறங்கும்போதுகூட
விலகும் விரலை
திடுக்கிட்டுப்பிடிப்பாய்
உண்ணும்போதும் மடியில்
அமர அடம்பிடிப்பாய்
கண்பார்வையில்மறைந்தால்
கதறி அழுதிடுவாய்
முத்தம் கொடுக்காமல்
மூடியதில்லை உன் விழிகள்
நான்வரும்
சத்தம்கேட்கவே காத்திருக்கும்
உன் செவிகள்..
தாடை பிடித்தே காரியங்கள்
அனைத்தும் சாதித்திடுவாய்
புத்தாடைஅணிந்து முன்நின்று
கண்கள்பனிக்கச்செய்வாய்
கைபிடிக்காமல் உன்
பாதங்கள் வீதியில்
இறங்கியதில்லை
பள்ளியில் விடும்போது
டா டாசொல்லாது
மறந்தமைக்காக
பலப்பல லஞ்சம்பெற்றாய்
உடைகளை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
படிப்பை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
வேலைக்குகூட என்னையே
விபரம்கேட்டாய்
வாழ்க்கைத்துணையைமட்டும்
ஏன் மகளே
மறைத்துவிட்டாய்.....................
விலகும் விரலை
திடுக்கிட்டுப்பிடிப்பாய்
உண்ணும்போதும் மடியில்
அமர அடம்பிடிப்பாய்
கண்பார்வையில்மறைந்தால்
கதறி அழுதிடுவாய்
முத்தம் கொடுக்காமல்
மூடியதில்லை உன் விழிகள்
நான்வரும்
சத்தம்கேட்கவே காத்திருக்கும்
உன் செவிகள்..
தாடை பிடித்தே காரியங்கள்
அனைத்தும் சாதித்திடுவாய்
புத்தாடைஅணிந்து முன்நின்று
கண்கள்பனிக்கச்செய்வாய்
கைபிடிக்காமல் உன்
பாதங்கள் வீதியில்
இறங்கியதில்லை
பள்ளியில் விடும்போது
டா டாசொல்லாது
மறந்தமைக்காக
பலப்பல லஞ்சம்பெற்றாய்
உடைகளை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
படிப்பை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
வேலைக்குகூட என்னையே
விபரம்கேட்டாய்
வாழ்க்கைத்துணையைமட்டும்
ஏன் மகளே
மறைத்துவிட்டாய்.....................
No comments:
Post a Comment