ஆகுதியாய்.................
------------------------------ மெல்லப்பரவினாய் ஓர் அகர்பத்தியின் புகைபோல முதலில் தான் பற்றிக்கொண்டு தன்னைமணக்கச்செய்தாய் பின் மெல்ல உன் சுற்றுப்புறத்தை ஆக்கிரமித்தாயுன் வாசத்தால் அறையின் ஒவ்வொரு அணுவாகமாறினாய் பின் மெல்லத்தீண்டினாய்என்னை மெல்லியமேகப்புகையாய் என் மேனியெங்கும் சிலிர்ப்பித்தாய் சுழன்று நகரும் வாசனை நறுமுகையாய் தொலைவிலிருந்தே மனம் நிறப்பினாய் அருகே வந்து என்னை உயிர்ப்பித்தாய் ஒற்றை முத்தத்தால் என் உடல் செல் எல்லாம் நிறப்பினாய் காதல்தீயை பற்றிஎரியும் வேலையில் உன்னை ஊற்றினாய் ஆகுதியாய் என்னை எரித்தாய் யாகசாலைமாஞ்சுல்லியாய் வெந்துதனிந்தது என் தேகம் வந்துபொழிந்தது விழிநீர் நயகராவாய்........ என் ஈரேழுஜென்ம தவத்திற்கு என்னை எனக்கே பரிசளித்தாய் பிரியும்வேளையில் யாதும் தோணாத கையறுநிலையில் கலங்கியபடி நானும் என்னுள்ளும் நிறைந்தநீயும்........................அ.முத்துவிஜயன் | ||||
No comments:
Post a Comment