ஊண் உறக்கமில்லை
உன் நினைவன்றிவேறில்லை
காணும்பொருள் யாவும்
கண்ணே நீயின்றிவேறில்லை
சிந்தனை யாவும் உன்
சிரித்தமுகமன்றிபிறிதில்லை
கண்மூடிபடுத்தாலும்
கனவிலும் உன் தொல்லை
பேச்சுக்களில்கூட உன்
பெயர்தவிர்க்கையலவில்லை
பாடும்பொருள் அத்துணையும்
பாவை உன்னைத்தவிரவேறு இல்லை.
அதைபாடாது எனக்கும்
வேறு பணியில்லை....
No comments:
Post a Comment