Tuesday, 28 July 2015




இசையின் 
ஏழுஸ்வரங்களையும்
என்னில் மீட்டுகிறாய்
உனது விரல்களால்
என்னை வீணையாய்
மடியில் வைத்து
ஒவ்வொரு ஸ்வரத்தையும்
ரசித்து வாசிக்கிறாய்
என்னில் எழும்பும்
இசையை கண்மூடி
நானேரசிக்கும்வண்ணம்
உன் ஒவ்வொருமீட்டுதலும்
என்னை எங்கொ
கொண்டுசெல்கின்றன
நீயும் பயணிக்கிறாய்
என்னுடன் என்னை
மீட்டியபடி
எங்கோ வானில்
பறக்கிறோம் ஒன்றாய்
இணைந்தபடி............








பிரிவில் துடித்துக்கதறுகிறது 
இதயம் விழிகள் எரிந்து 
இதழ்கள் துடிதுடித்து
தாரைதாரையாக 
கண்ணீர்வழிய 
பதறுகிறது மனசு 
உன்னை நினைத்து
நீ பிரிந்தாலும் 
நான் பிரியமுடியாமல் 
கொல்லும் தனிமையுடன் 
என்னையே இழந்தபடி......





உனது உதாசீனங்களால்
உள்ளத்தைத்தைக்கிறாய்
உயிர்வலி வரும்படியாக
இதயம் வலித்து விழிகள்
கசியும் படியாக 
இருவிழிகளும் 
மழைபொழியவைப்பதில்
பேரானந்தம் கொள்கிறாய்
உனக்கும் வலிக்கும்
என்ற உண்மை மறந்து
விழிகளுக்குத்தெரிவதில்லை
மறைக்கும் வித்தை
காட்டிக்கொடுத்து
பின் வருந்தி படபடக்கிறது
தன் தவறுணர்ந்து
அந்தவிழிகள் தானே 
எல்லாவற்றிர்க்கும்
காரணம்........








எங்கிருந்தோ
மீட்டுகிறாய் 
ஆனந்தயாழை
என்னில்புகுந்து
என்னை 
ஆட்டுவிக்கும்படி
செவிவழிபுகுந்து
இதயம் பிசையும்
ஓர் அற்புதவடிவத்தில்
இதயமெங்கும் 
நிறைந்து
விழிகளில் வழிகின்றதே
உன் இசை
நாசித்துவாரங்களின்
வழிகூட நனைகின்றதே
எப்படி ஆட்கொள்ளுகிறாய்
என்னை 
உன் விரல்கள்
கம்பிகளில் செய்யும்
ஜாலத்தால்......




அன்புள்ள மகனுக்கு
இதை பக்கத்துவீட்டு
பையனைவைத்துத்தான்
எழுதுகிறேன்....வழக்கம்போல
நான் படிக்காததால்
நீ எப்படியாவது 
படிக்கவேண்டும்என்ற
ஆசையால் 
பொறியியல்கல்லூரியில்
சேர்த்துபடிக்கவைத்தேன்
உன்னுடையதேவைகள் 
பலவற்றை என்னிடம்
சொல்லாமலே சமாளிப்பதை
நான் அறிவேன் 
என் கஸ்டம்
உனக்குப்புரிந்ததால்
இந்தமுறைகூட நிலத்தின்
ஒருபகுதியைவிற்று
அந்தப்பணத்தைத்தான்
அனுப்பியிருக்கிறேன்
வயல்தான் விளையவில்லை
நீயாவது பட்டாதாரியாக
விளைந்து வருவாய் என்று
விளையாமல் சாவியாய்
வந்துவிடாதே 
சாகுபடிதான் செய்கிறோம்
சாகும் படி செய்துவிடாதே
கவனம் மகனே,,,,,,,,,,,

இதயத்தில் சந்தேகக்
கோடுவரைகிறாய்
இதயக்கூட்டில் 
உன்னை
குடிவைத்ததை 
அறியாமலே
வார்த்தைகளால்
கருவண்ணம் பூசுகிறாய்
வலிகளை உணராமலே
பிறர்சொல்கேட்டு
பேதமைசெய்கிறாய்
விழிகளை
துடைக்கவேண்டியநீயே
தூசிகளைத்தூவுகிறாய்
புரிதலில் பிழைசெய்து
புண்ணாக்குகிறாய்
என் இதயசுவர்களை..........
என்னசொல்லி 
புரியவைப்பேன்
என் இதயத்தை
காட்சிப்படுத்த..............

காலயிலஎந்திரிச்சி
வாயக்கொப்புளிச்சிட்டு
ஒருசொம்புதண்ணி
குடுச்சுபுட்டு
வாசலக்கூட்டி
குப்பயக்கூட்டிஅள்ளி
குப்பதொட்டிலபோட்டுட்டு
மாட்டுச்சாணிய அள்ளி
வைச்சிதண்ணிலகலக்கி
வாசத்தொளிச்சிட்டு
லேசாவெயில்லபட்டு
காஞ்சஒடனே
அழகழகாகோலம்போட்டு
அதுலபூசணிப்பூவச்
சொருகிவைச்சுட்டு
ஓரமாநின்னு பாத்தா
சொக்கிப்போவீங்க
இத்தனவேலபண்ணதும்
தானாவயித்தகலக்கி 
கொள்லைக்கிவந்துடும்
வெளிச்சம்வரதுக்குமுன்னாடி
போகனுமுள்ள....இப்போ
ட்வுன்ல மகவீட்டுக்கு
போயிருந்தேன்...
அங்கமாட்டுசாணியுமில்ல
கோலம்போடஎடமுமில்ல
கொள்லயுமில்ல
பசியுமில்ல எல்லாம்
கொள்ளைபோயிடுச்சாம்.........
A Muthu Vijayan Kalpakkam'