வண்ணங்களைத்தொலைத்த
வாழ்வின் இருள் பக்கங்களில்
வாஞ்சை வண்ணம்
பூசி உறைந்திருக்கின்றாய்
ஒளிபூசிய ஓவியமாய்
உள்ளத்தில் உறைந்திருந்த
சோகங்களை உருக்கிஎடுத்தாய்
உன் உஸ்ணப்பெருமூச்சால்
உன்னுடன் உறைந்த
உன்னததருணங்களை
ஓவியமாக்கியிருக்கிறேன்
வாழ்வின் பக்கங்களெங்கும்
இருண்டபக்கங்களின்
ஒளிப்பிரவாகமாக நீ
.
No comments:
Post a Comment