சாலையிலிருந்த
சரலைகற்களே
என்னை கவனமாக
நடக்கக்கற்பித்தன
ரோஜாவிலிருந்த முட்களே
என்னை கவனமாக
பறிக்கக்கற்றுக்கொடுத்தன
சங்கடங்களே என்னை
சவாலுக்குத்தயார்செய்தன
என்னைவென்றவர்களே
எனது வளர்ச்சிக்கு
நீரூற்றினர்
என்னைத்தோல்விக்குத்
தள்ளியவர்களே
அவர்களையறியாமல்
முன்னேற்றத்திற்கு
முன் தேதியிட்டனர்
என்னை
அவமானப்படுத்தியவர்களே
அவர்களே அவர்களைஅறியாமல்
அரியணையை தயார்செய்தனர்
என்மேல் கல்லெறிந்தவர்கள்தான்
என் கோட்டைக்கு
ஜல்லிகற்கள்
வழங்கினார்கள்.....
அவர்களுக்குத்தான்
நன்றிகளை கல்வெட்டில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதையாக......என்
கதையை.......
சரலைகற்களே
என்னை கவனமாக
நடக்கக்கற்பித்தன
ரோஜாவிலிருந்த முட்களே
என்னை கவனமாக
பறிக்கக்கற்றுக்கொடுத்தன
சங்கடங்களே என்னை
சவாலுக்குத்தயார்செய்தன
என்னைவென்றவர்களே
எனது வளர்ச்சிக்கு
நீரூற்றினர்
என்னைத்தோல்விக்குத்
தள்ளியவர்களே
அவர்களையறியாமல்
முன்னேற்றத்திற்கு
முன் தேதியிட்டனர்
என்னை
அவமானப்படுத்தியவர்களே
அவர்களே அவர்களைஅறியாமல்
அரியணையை தயார்செய்தனர்
என்மேல் கல்லெறிந்தவர்கள்தான்
என் கோட்டைக்கு
ஜல்லிகற்கள்
வழங்கினார்கள்.....
அவர்களுக்குத்தான்
நன்றிகளை கல்வெட்டில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதையாக......என்
கதையை.......
No comments:
Post a Comment