Tuesday, 28 July 2015

சந்தேகமேகங்கள் என்
மனக்கதவை 
தட்டும்வேளைகளில்
தடுமாற்றம் 
என் விழிகளை 
மறைக்கின்றது
மனம்சோர்ந்து 
விழிகள்நீரைபொழிய
முடங்குகிறேன்
இருள் மூலைகளில்
அப்போதும் உன்
வெளிச்சதேற்றல்
பிரபஞ்சஒளியாய்
என்னை அணைக்கிறது
உன்சின்னசின்ன
ஒளி வார்த்தைகள்
முத்தமிட்டு
என் இருள் விரட்டுகிறது
விழிகளைத்துடைக்கிறது
இதயத்தின் இயக்கத்தை
இனிமையாக்குகிறது
இருக அணைத்து
என்னைதேற்றி
இன்னுயிர்காக்கிறது.....
நீதானடா என் வாழ்க்கை........

துரத்துகின்றனஉன் நினைவுகள் 
பஞ்சபூதங்களாகஎன்னை
தொடர்ந்துவந்து
தூங்கவிடாமலே
தள்ளிவிடமுயலுகிறேன்
நீரைப்போல ஆனால்
சூழ்ந்துகொள்கின்றன
காற்றைப்போல் விலக்கமுடியாமலே
ஆகாயம்போல நான்
போகுமிடமெல்லாம்
தொடர்கின்றனவே
நெருப்பாக கனன்றுகொண்டு
மண்ணில் நான் சேரும்வரை
மாளாது உன் நினைவுகள்
கண்ணில் வந்து 
நீ நிற்கும் வரை.......

மகபிரசவத்துக்கு உள்ளே
போயிருக்குவலிகூட
வந்துகத்துது
மொதரெண்டும்
பொண்ணாப்போச்சு
இந்தபிரசவத்துல
மகனோடவந்தா
வீட்டுக்குவா இல்லன்னா
வராதன்னு சொன்னாளாம்
மாமியா.....
அதெநெனச்சுதான் 
ரொம்ப அழுகுதுமக
அழுகாதடி அந்தமலக்கருப்பு
பாத்துக்கிடும் மகன் தான்
பொறப்பான் மகன் பொறந்தா
கடன்வாங்கியாவது
ரெட்டகெடாவெட்டி
பூஜைபோடுறேன்னு
வேண்டிருக்கேன்
கருப்பு சாமிஎறங்கி
சொல்லிருக்கு ஆம்பளை
பிள்ளகொடுத்துட்டு
பூஜையஏத்துக்கிறேன்னு....
கவலப்படாதம்மா.....னு
ஆறுதல்சொல்லி அனுப்பிட்டு
சாமியத்தான் 
கும்பிட்டுகிட்டுருக்கேன்
கருப்புதான் வழிபண்ணனும்
சாமி.......எம்புள்ளயக்காப்பாத்து.....

முன்பனி மார்கழியில் 
பனிபிரிய பகலவன் 
முத்தமிடும் 
பக்திப்பொழுதில் 
அன்றலர்ந்த 
அழகிய மலர்கள் கொய்து 
என்றுமெனைக்காக்கும்
ஈசனை வேண்ட 
தாய்மடிதேடும் 
கன்றினைப்போல் 
கண்கள் பனிக்க 
தோழிபுடைசூழ 
தொண்டுகள் பல 
யாம் புரிய 
வேந்தன் எந்தன் காதலன் 
வம்சம் தழைக்க வே 
என்னில் கூடி
தன் வாரிசை 
என்னில் பெற்று 
தரணி யாழ அருள்செய் 
என்னை படைத்து 
கண்மூடிதவமிருக்கும் 
முக்கண் ஈசனே......

முத்தம் காமம்
வளர்க்குமோர்
காட்டுத்தீயின்
மின்னல்வடிவம்
மோகத்தீக்குக்கு
முகவுரை
முத்தம் சித்தம்
கலங்கவைக்கும்
போதை மாத்திரை
சகல நர்ம்புகளுக்கும்
அவசரசெய்தியனுப்பி
தயார்செய்யுமோர்
தானியங்கி ஒலிபரப்பி
தொடக்கத்தில் துவங்கி
முடிவில் மீண்டும்
துவங்குமோர்
கணிதசூத்திரம்
ஆனால் இது
காதலருக்கு
மாத்திரம்........
அப்துல்கலாம்......
-------------------------------------
தமிழனனின்அறிவியலின்
அடையாளம்நீ
பதவியால் பெருமைபெற்றவரல்ல
உன்னால் 
குடியரசுத்தலைவர்பதவி
பெருமைபெற்றது
அந்தநாற்காலி நீ அமர்ந்த
அன்றுதான் செய்யப்பட்டதன்
பலன் உணர்ந்தது
அந்தநாற்காலியில் அமர்ந்த
முதல் மக்கள் அறிவியலான் நீ
விமானம்செய்யும் 
உலோகத்தால் காலணி
செய்து போலியோ
குழந்தைகளின் 
சுமை குறைத்தவன்நீ
உலக அரங்கில்
தமிழனை தலைநிமிரச்செய்த
தரமான ஆசிரியன் நீ
ஐநாவாவை ஆச்சர்யப்படுத்திய
முதல் தமிழ் ஆசிரியன் நீ
ராமேஸ்வரத்திற்கு
தழிழ்ராமன் நீ
கடைசிநிமிடம் வரை
கல்வியாலராக வாழ்ந்த
கலைமகளின் தவபுதல்வன் நீ
மறைவவில்கூட
மற்றவர் உழைக்க
செய்திகொடுத்த மாமேதை நீ
கனவுகானச்சொல்லி
கற்றுக்கொடுத்த
காலதேவன் நீ
குடியரசுத்தலைவர்
மாளிகையில் இன்னும்
வாழ்ந்துகொண்டிரூக்கும்
ஒரே நல்லதமிழ் நீ
எங்கள்மனதிலும்...இன்றும் என்றும்
வாழும் ஒரே குடிமக்களின்அரசன் நீ,,,,,,,,

நான் சற்றும் உன்னை
எதிர்பாராத அந்த நேரத்தில்
என்னடா இப்படி
செய்துவிட்டாய்என்னை
நிலை குலந்து 
உடல் வியர்த்து
தொண்டை உலர்ந்து
போகும்படி ஆக்கிவிட்டாய்
கைதேர்ந்த திருடன்நீ
ஒருவருக்கும் தெரியாமல்
கூட்டத்தில் கை பிடித்து
அழுத்துகிறாய்
ஒன்றுமேஅறியாத 
முகபாவனையுடன்
என்னை அந்தகணம்
நிலை குலையவைத்துவிட்டாய்
பின் வழிப்போக்கன்போல
என்ன ஆனது என்று
விசாரணைவேறு
கொன்றிருப்பேன் உன்னைஅப்போது
ஆனால் இப்போதுஅந்த கை யை 
பார்த்துபார்த்து மகிழ்கிறேன்
மீண்டும் அந்தவழியில்
பயணம் செய்து பார்க்கிறேன்
திரும்ப நீ என்
கைபிடிக்க மாட்டாயாஎன்று
பாடா படுத்துகிறாயடா
கள்வனே