AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 19 April 2013
ஒன்றாக இணைய நீ நின்றாகவேண்டும்
நன்றாக நிற்க எனை வென்றாகவேண்டும்
உன்னிடம் அடைக்கலமான கன்றாகவேண்டும்
என்றெனும் உனை தின்றாகவேண்டும்..
இதயச்சுவர்களில் நீ வரைந்த
அடர் சிவப்பு சோக ஓவியங்கள்
கறையாகப்டிந்திருக்கின்றன
ஒவியங்கள் மறைந்தாலும்
சுவர்கள் ஒருபோதும் மறப்பதில்லை
கறைகளின் வடுக்களை......
வீதியில் கிடந்த குட்டையில்
பிரதிபளிக்கிறது அழகு நிலவு பகலில்
நீ சென்ற அவ்வழியே
நிலவென ஏமார்தேன் நான்
எனது ஆளுமையை உன்
ஒற்றைச்சிரிப்பில்
கொள்ளையடிக்கிறாய்
களவுகொடுத்து கலங்கி நிற்கிறேன் நான்
களவுசெய்துவிட்டு
கள்ளமற்றவள் போல் சிரிக்கிறாய் நீ
உனது அணைப்புகளில் எனது சுயம் இழக்கிறேன்
என்னுள் உறைந்திருக்கும் நீ விழித்துஎழுகிறாய்
உன்னை உன்வசமாக்கி என் உயிரை பிழிகிறாய்
ஜடமாகதான் நான் ஆகிறேன் களைத்து பேசும் திறனின்றி....
எனது தனிமையை நீ எப்போதுமே
பகிர்ந்துகொள்கிராய் ரகஸியமாக,,,,
நீ வந்தபின் அது எப்படி தனிமையாகும்
எனது தனிமையை தின்கிறாய் நீ
உன்னைப்பார்த்த போதுதான்
என்னில் நான் உயிர்த்தெழுகிறேன்
உனது முத்தங்களை வாங்குவதற்காகவே
முகம்சாய்க்கிறேன் உனது தோள்களிலே.....
எனது வாயிற்குள் செல்லும்
ஓர் உணவு உருண்டையில்
அடங்கிவிடுகிறது
அம்மாவின் உலகம்
அவளுக்கு அது
இல்லாத பொழுதுகளிலும் கூட....
உன்னுடனான ஊடல்களில்
உறைந்திருப்பது உன் மீதான
அதீத அன்பும்
என்னைத்தாண்ட முயற்சிக்கும்
உன் முடற்சியின் எல்லைகளை
கண்டுகொள்ளும்
ஆர்வமும் தான்
வட்டத்தின்
மையத்தில் நின்று
கவண் சுழற்றும் லாவகம்
கைவந்திருக்கிறதா என்ற
சுயபரிசோதனையும்தான்.....
......
கவிதைகளில் கலந்தோம்
கவிதையாக வாழ்ந்தோம்
கவி- விதைகளாக இருப்போம்
கவிதைகனவுகளில் மிதப்போம்,,,
இரவுகளுக்குள் நான்
தொலைந்துகொண்டிருக்கிறேன்
உன்னுடனான உறவுகளின்
படிமங்களில் உறைந்துகொண்டிருக்கிறேன்
கண்களை மூடிதவமிருக்கிறேன்
காலங்கள்தாண்டி உயிர்த்திருக்கிறேன்
ஞாலம் முழுதும் தேடிப்பார்க்கிறேன்
காத்திருந்தே நான் காதல்செய்கிறேன்.....
சலனங்களைத்தாண்டி நிற்கும் சாகசம்நான்
சறுக்கியே குறையும் சந்திரன்நான்
நீருடன் சரஸமாடுவதில் இந்திரன்நான்
மணல்படுகை உருவாக்கும் எந்திரன்நான்
உடைந்தாலும் தன்மைமாறா உயிர்சிற்பம்நான்
காத்திருந்து நீருடன்கரையும் தியாகிநான்
கடைந்தாலும் கைகூப்பவைக்கும் கடவுள் நான்..
உன்னைப்பிடிக்கும் என்பதால்
உன்னிறத்தில் உடையுமணின்தேன்
உன்நிறக்கூந்தலை அடிக்கடி
கோதிப்பார்க்கிறேன்
பிடித்த பறவைகூட
காகமாகிப்போனது
கார்மேகம் கண்டால்
கண்கள் விரிந்தது
காரிருள் சூழும் இரவுகள்
எல்லாம் இனிக்கிறது
கண்மை பிடித்துபோனது
கண்ணாலனே
உனக்கு மட்டும் ஏன் என்னை
பிடிக்காமல் போனது,,,,,,,,
உன்னுடனான் உறவுகள் நகங்கள் அல்ல
வேண்டாத வேண்டாதபொழுதுகளில்
வெட்டி எறிவதற்க்கு
நீ விரும்பாவிட்டாலும்
நான் விரும்பாவிட்டாலும்
மறைக்கவியலாத
கைகளூடன் பிறந்த ரேகைகள்........
இலையின் பயணம் காற்றோடு
மீனின் பயணம் நீரோடு
மானின் பயணம் காட்டோடு
எனது பயணம் என்றும் உன்னோடு
உனது பெயரை எழுதும் பொழுதுகளில்
எனது பேனா உயிர்பெறுகிறது
அதன் மையும் மையல் கொள்கிறது
காகிதம் கனமாகிறது
கவிதை யான உன் பெயரால்
கர்வமடைகிறது...
உனது வழிதடங்களில் புல்லாவேன்
உந்தன் பாதங்களை ஸ்பரிசிக்க
நீ சுவாசிக்கும் காற்றாவேன்
உன் இதயம் தரிசிக்க
நீ அருந்தும் நீராவேன்
உன் தாகம் தீர்க்க
நீ அணைக்கும் தலையணையாவேன்
உன் மோகம் தீர்க்க....
தாத்தா பாட்டிகள் இருந்த இடங்களை
நிரப்புகின்றன தொலைக்காட்சிபெட்டிகள்
கார்டூண் கதைகளை ச்சொல்லிக்கொண்டு
பெரும்பாலும் என் விழிகள்
திறப்பதில்லை
திறந்தால் வழிந்துவிடுமோ
உன்னுடனான
கனவுகள் விழிவழியே
விழிநீராகவே............
Thursday, 11 April 2013
ஒற்றைப்பார்வையில்
என்னை உறையவைக்கிறாய்
உள்ளே புகுந்து
என்னை உளரவைக்கிறாய்
விழிகளாலே விழுங்கிவிடுகிறாய்
வீணாக ஏன் இன்னும் நிற்கிறாய்
வேண்டுமென்றேதான் தடுக்கிறேன்
ஆம் நீ மட்டும் வேண்டுமென்று
எப்படியும் நீ தடுதாட்க்கொள்வாய்
என்ற நம்பிக்கையில்
பொங்கிவரும் அலையின் விளீம்பில்
விழிகள் போருக்குத்தயாராக
போர் உன்னுடனானாலும்
காயம் கண்டிப்பாக எனக்குத்தான்.....
பூமியின் மேற்பரப்பில் உலர்ந்த என்
மனக்கிளைகளைக்கண்டு கலங்காதே
ஈரவேர்கள் என்றும்
உன் நினைவோடுதான்ஊறிக்கிடக்கின்றன
எப்போதுவேண்டுமானாலும்
பூக்கவைக்கும் நம்பிக்கையுடன்....
—
அந்த ரகசியத்தை
சொல்லிவிடாதேபூக்களிடம்
வாடாமல் மலர்ந்தே
இருக்க எப்படிமுடியும் என்ற....
வாழ்வின் சிந்தனைக்கு
வழமையானமாற்றுதந்து
எனது சிந்தனைபோக்கில் காதலை
முதலில் இடைச்செருகாலாக சொருகி
பின் இடையறாசிந்தனையாக
மாற்றிவிட்டாய்
எனக்கான என் ஆப்பிளே....
தவிப்புடன் தகிக்கிறது தனலான
உன் பார்வை
தாபங்களையும் தவிர்ப்புகளையும்
தன்னகத்தே தக்கவைத்துகொண்டு
தழுதழுப்புடன்தனிந்து.......
கனவுகளுடன் கைகுலுக்கி
நினைவுச்சங்கிலியின்
ஒற்றைமுனையை இறுகபிடித்து
கட்டுக்கடங்காத வேகத்துடன்
காதல் செய்ய வருகிறது
கார்காலநினைவு.....
ஒன்றாக இணைய நீ நின்றாகவேண்டும்
நன்றாக நிற்க எனை வென்றாகவேண்டும்
உன்னிடம் அடைக்கலமான கன்றாகவேண்டும்
என்றெனும் உனை தின்றாகவேண்டும்.
உனதுமடியில் சாய்கையில்
எனது மன அமைதி கருவாகிறது
உனது ஒரு சொட்டு விழி நீரில்
எனது மனபாரங்கள் எடை இழக்கின்றன
உனதுஒருவருடலில்
எனது நம்பிக்கைகள் துளிர்விடுகின்றன....
உனது உறவில்
எனது உயிர் வாழ்கின்றது
.
விழித்திரையில் தெரிகிறது
ஓராயிரமர்த்தங்கள்
இதழ்கள் சொல்ல
விரும்பியவற்றை
இடையறாது
முழங்கிக்கொண்டு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)