Thursday, 16 October 2014
காதலர்தினக்கவிதை,,,,,,,,,,,
உன் மார்பில் சாய்ந்து
உனது இதயத்துடிப்பில்
எனது இதயத்துடிப்பு கலந்து
ஒன்றாக உயர்ந்து ...
உன் மூச்சும் என் முச்சும்
ஒன்றாகக் கலந்து
உன் வியர்வையும்
எனது வியர்வையும்
செம்புலப்பெயர் நீர் போல்
ஒன்றுகலந்து
உன் உயிரும் எனதுயிரும்
ஒருயிராகும் தருணமே
எனக்கு பிறந்தநாளும்
வாழும்நாளும்
மரிக்கும் நாளும்,,,,,,,,,
உன் மார்பில் சாய்ந்து
உனது இதயத்துடிப்பில்
எனது இதயத்துடிப்பு கலந்து
ஒன்றாக உயர்ந்து ...
உன் மூச்சும் என் முச்சும்
ஒன்றாகக் கலந்து
உன் வியர்வையும்
எனது வியர்வையும்
செம்புலப்பெயர் நீர் போல்
ஒன்றுகலந்து
உன் உயிரும் எனதுயிரும்
ஒருயிராகும் தருணமே
எனக்கு பிறந்தநாளும்
வாழும்நாளும்
மரிக்கும் நாளும்,,,,,,,,,
வேடனே உன்
வேட்டையைதுவங்கு
உனது வித்தைகளின்
ரசிககைநான்
விழிமூடிக்கிடக்கிறேன்...
வனத்தில் உன் கைவண்ணம்
நானறிவேன் பதுங்கியிருக்கும்
முயல்களும் பாய்ந்தோடும்
மான்களும் காத்துக்கிடக்கின்றன
உன் வேட்டையில் செத்துமடிய
உன்கூரியபார்வையும்
வில்லின்விளையாட்டும்
அம்பின் ஆற்றலும் என்னை
கொல்லகாத்திருக்கிறேன்
விழிகள்மூடிஆவலுடன்...........
வேட்டையைதுவங்கு
உனது வித்தைகளின்
ரசிககைநான்
விழிமூடிக்கிடக்கிறேன்...
வனத்தில் உன் கைவண்ணம்
நானறிவேன் பதுங்கியிருக்கும்
முயல்களும் பாய்ந்தோடும்
மான்களும் காத்துக்கிடக்கின்றன
உன் வேட்டையில் செத்துமடிய
உன்கூரியபார்வையும்
வில்லின்விளையாட்டும்
அம்பின் ஆற்றலும் என்னை
கொல்லகாத்திருக்கிறேன்
விழிகள்மூடிஆவலுடன்...........
நீரின் குமிழாய்
நீர்த்துகொண்டே
பொங்கிபிரவாகமாக
சுழிக்கிறதுவாழ்வின்
பிரிக்க இயலாத முடிச்சுகள்...
அடியும் நுனியும்மாறிமாறி
சுழன்றுகொண்டே பிடிபடாது
நகர்ந்துகொண்டே
பிறக்கிறதுதினம்
விச நாக்கின்நுனியில்
வாழ்வைஅடகுவைத்து
தினம்செத்துபிழைக்கும்
நித்யகண்டமாக நீள்கிறது
எந்தகணமும் அறுந்து
தலைபிளக்கும்
பனைக்கருக்காக
தொங்கிக்கொண்டே
ஒருவேளைஉணவும்
கானல்நீராய் குதிரை
முன்கட்டிய உணவுதுண்டாய்
ஓடிக்கொண்டிருக்கிறது முன்னால்
இலக்கறியாது ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியின் பின் சக்கரம்போல்
ஓட்டம்வாடிக்கையானதுதான்
நீர்த்துகொண்டே
பொங்கிபிரவாகமாக
சுழிக்கிறதுவாழ்வின்
பிரிக்க இயலாத முடிச்சுகள்...
அடியும் நுனியும்மாறிமாறி
சுழன்றுகொண்டே பிடிபடாது
நகர்ந்துகொண்டே
பிறக்கிறதுதினம்
விச நாக்கின்நுனியில்
வாழ்வைஅடகுவைத்து
தினம்செத்துபிழைக்கும்
நித்யகண்டமாக நீள்கிறது
எந்தகணமும் அறுந்து
தலைபிளக்கும்
பனைக்கருக்காக
தொங்கிக்கொண்டே
ஒருவேளைஉணவும்
கானல்நீராய் குதிரை
முன்கட்டிய உணவுதுண்டாய்
ஓடிக்கொண்டிருக்கிறது முன்னால்
இலக்கறியாது ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியின் பின் சக்கரம்போல்
ஓட்டம்வாடிக்கையானதுதான்
நரமாமிசநெடி
நாசியைத்துளைக்கிறது
கனிந்தமுத்தம்முடிந்து
இதழ்பிரிக்கையில்
...
நாசியைத்துளைக்கிறது
கனிந்தமுத்தம்முடிந்து
இதழ்பிரிக்கையில்
...
சற்றேமூடிய
விழி இமைகளின்
வழியேபிதுங்கிவழிகிறது
மூர்க்கமாக காதல்
அய்ம்புலன்களும்
அலறுகின்றன
செவிகளை
திறந்துவைத்து
வெப்பவிதைப்பில்
விதைக்கப்படும் வெப்ப
விதைகளுக்காக
விழிதிறந்துகாத்திருக்கும்
புலன்கள் ஆவலாய்
புலன்களின்
நாக்குகள்வறண்டு
ஈரப்பதம்வேண்டும்
பாலையாய் தவமிருக்கின்றன
எப்போதொ வீசும்
மழைக்காற்றின்
குளிர்வித்தலுக்காக
சிலிர்த்துதகிக்கின்றன
மேடுபள்ளங்கள்நிறைந்த
மணல்திட்டுகளாய்தேகம்
ஒவ்வொருமுறையும்
வரையும்
புதியஓவியங்களை
காணும் ஆவலோடு
விழி இமைகளின்
வழியேபிதுங்கிவழிகிறது
மூர்க்கமாக காதல்
அய்ம்புலன்களும்
அலறுகின்றன
செவிகளை
திறந்துவைத்து
வெப்பவிதைப்பில்விதைக்கப்படும் வெப்ப
விதைகளுக்காக
விழிதிறந்துகாத்திருக்கும்
புலன்கள் ஆவலாய்
புலன்களின்
நாக்குகள்வறண்டு
ஈரப்பதம்வேண்டும்
பாலையாய் தவமிருக்கின்றன
எப்போதொ வீசும்
மழைக்காற்றின்
குளிர்வித்தலுக்காக
சிலிர்த்துதகிக்கின்றன
மேடுபள்ளங்கள்நிறைந்த
மணல்திட்டுகளாய்தேகம்
ஒவ்வொருமுறையும்
வரையும்
புதியஓவியங்களை
காணும் ஆவலோடு
Subscribe to:
Posts (Atom)





