Thursday, 11 April 2013

புனைவுகளுக்கு நடுவே


நான் புதினம் புனைகிறேன்


புதைந்துகிடக்கும் பலமுகங்கள்


புரியத்தொடங்குகின்றன


புன்னகையுடன்


பொறாமையுடன்


காதலுடன்

காமத்துடன்

கள்ளமற்றமுகம்தாங்கி

அத்தனையும் 

பதிவுசெய்கிறேன்

வண்ணங்களால்......

நழுவுகிறது எண்ணங்கள்

தூரிகையின் நுனியில்........
மரத்துபோகிறது நெஞ்சம் 


நான் உன்னை 

மறக்கச்சொல்லும்போதெல்லாம் 


உயிர்த்து எழுகிறது 


உனை நினக்கும் போதல்லாம்......

நெருங்கிறது நெஞ்சம் உன் அரவணைப்பில் 

நெகிழ்கிறது நெஞ்சம் உனது ஸ்பரிசத்தில் 

குழைகின்றன கால்கள் உன் முத்தங்களினால்...


Tuesday, 19 March 2013

விடுவதற்கா பிடித்தாய் என் விரல்களை 


விரல்களை விடுவித்தாலும் 


விழிகள் தொடர்வதை என்னசெய்வாய் 


விழித்திருக்கும்வேளைகளில் நினைவாக 


விழிமூடும்வேளைகளில் கனவாக 


எப்போதுமே என் நிழலாக 


என்றும் என உயிராக நீ....


உனது கூந்தலில் சூடப்பட்டதால் 


மோட்சமடைந்த பூக்களின் மேல்


நான் பொறாமைகொள்கிறேன் 


என்னிடமிருந்து தினம் வாய்ப்புகளைப் 


தட்டிப்பெறுவதால்..


உன் விரல் பட்டதும் நான் 


சிறகுகள் முளைத்துப்பறவையாகி


விண்ணில் பறக்கிறேன் 


நான் தரையிறங்க 


உன் இதழ்களை 


தயராகவைத்திருக்கிறாயா.....


உனது சமாதான முத்தங்களூக்காகவும் 


சமாதானமுகபாவங்களை ரசிப்பதற்காகவுமே 


நான் பொய்சண்டை இடுகிறேன்

சமாதானம் அடையாததுபோல் நடிப்புடன்....