Friday, 22 February 2013

ஒற்றைககடிதத்தில் உனது 


உன் உள்ளத்தை உருக்கி 


வரைந்திருக்கிறாய் 


உணர்வுகளை 


எழுத்துகளாக்கி 


உயிர்தந்திருக்கிறாய்


கண்ணீரில் நனைத்து

வெப்பபெருமூச்சில் உலர்த்தி

உதிரத்தில் கையொப்பமிட்டு

மோகததை

முத்தங்களால் பதித்து

சோகங்களை மடித்து

அனுப்புகிறாய்

அத்தனையும்

உன்

இதழ்தரும்

ஒற்றை முத்ததிற்கு ஈடாகுமா...

Tuesday, 19 February 2013

உள்ளே என்னைசிறைவைத்து 


உட்கார்ந்து காதல் செய்கிறாய்


உள்ளத்திற்குள் காதல்விதைத்து 


உயிரைவளர்க்கிறாய்


உணர்வுப்படகில் பயணித்து 


உயிரைக்கடக்கிறாய்


உனதுவிழி இதழ்களுக்குளே விழுந்துகிடக்கிறேன்



நான் விதைகளாக வீரியமுடன்



என்னை சிறை நீ வைப்பாயோ சிதறவிடுவாயோ



சீக்கிரம் சொல்லிவிடு செத்துமடியுமுன்னே





இருவரிகள் சேர்ந்தால் பிறக்கிறது கவிதை


இரு இதழ்கள்சேர்ந்தால் பிறக்கிறது இனிமை


கவிதையின் இதழ்களில் ஊடாடி


ஒளிந்திருக்கிறது காதல்விதை


நின்னைச்சரணடைதேன்


நீடுதுயில் கொள்ளும்வரை 


உன்னில் உயிர்த்துப்போனேன் 


உயிர்உள்ளுரையும்வரை


காதலாகிக்கசிந்துருகினேன் 


கண்ணில் நீ நீராய் வழியும் வரை


என்னை நான் மாற்றிக்கொண்டிருக்கிறேன் 

நீயாகவே

என் மனதைதேற்றிக்கொண்டிருக்கிறேன் 

நிரந்தரமாகவே 

எல்லாவற்றையும் எட்டிப்பார்க்கிறாய் 

நிலைகண்ணாடியிலிருந்து......

நிழலாகவே ..........


தூக்கநேரங்கள் எல்லாம் துக்க நேரங்களாக 

எண்ணும் நேரங்களெல்லாம் ஏக்கநேரங்களாக 

விழிமூடும்போதல்லாம் ஈரங்களாக 


நாம் இணையும் நேரம் மட்டுமே இயல்பாக....