Monday, 23 March 2015

முன்னம் சிலபொழுதுகளில்
சின்னஞ்சிறியேன் நான்
கண்ணன் உன் திருநாமம்
செவியுறும்பேறுபெற்றேன்
இன்னும் சிலகாலம்
இசையாக உன் நாதம்
எந்தன் செவிவழி
இதயம் நிரப்பும் 
இன்பமுணர்ந்தேன்
பின்னம்நான் காற்றின்
திசையெல்லாம்
கண்ணன் உன்னை
காணுறக் காதலுற்றேன்
காணாமல் விழித்ததால்
கண்கள் வழிய 
காத்திருக்கலானேன்.....
கண்ணுற்றேன் உன்னை
கார்மேகமாய்
கசிந்துருகினேன் காதலால்
மழை பெய்ததென்
கண்களில் உன்னைக்
கண்ணுற்ற பேரானந்ததில்................
Unlike ·  · 
உனக்கான பூக்களாக
எனது கவிதைகளை
அர்ச்ச்னை செய்கிறேன்
தினமும்.......
உன் 
பார்வை வரம் வேண்டி
Unlike ·  · 
தக்கையின் மேல்
 
விழிகளாக
 
தகிக்கிறது
 
மனசு
 
உன் மீன் விழிகள்
 
சுண்டுகிறதா
 
என்றறிய......
தினமும் உன் 
இதயக்கதவை
தட்டிக்கொண்டிருக்கிறேன்
எனது பார்வை
விரல்களால்
திறக்கும்நேரம்
திறந்திருக்குமோ
என் விழிகள்......
மூடியிருக்குமோ
என்றறியாமலே
விரல்கள் தொடும்
தூரத்தில் இல்லையெனினும்
விழிகள் தொடும் 
தானிருந்தேன்
மனமிருந்திருந்தால்
விழிவருடலின்போது
இமைதாழ்த்தி
இருமனம் கலந்திருக்கும்
இப்போதும் நான்
நிற்கிறேன் உன் அன்பு
வேண்டி
யாசகம் கேட்டபடி
என்னை புரிந்துகொள்ளும்
ஓரடிகூட 
நகர்தலில்லை
யாசிக்கிறேன் என்றறிந்தபோதும்
விளயாதமண்ணில்
விழுந்த மழைத்துளியானேன்
காய்ந்து கருகி
காற்றுடன் கலந்தபடி........
ஒவ்வொரு
வார்த்தையிலும்
முற்றுப்புள்ளியாக
முட்களை வைத்து
வலிகளை தைக்கிறாய்
சூழல்களின்
அழுத்தம் மனதைபாரமாக்க
நீயும் சுழற்றிவிடுகிறாய்
உன் பங்குக்கு தலை
சுற்றும் வகையில்
உனக்காக சுற்றிய
கால்கள் கதறுகிறது
சுற்றும் செயலிழந்து
சிந்தை பிதற்றுகிறது
உன்மத்தமாகி
ரசித்தமனது
ரணமாகிக்குருதி
கொட்டுகிறது
உயிர்நீத்தலின்
உச்சமாக 
உதறிக்கொண்டிருக்கிறது
உயிர்கொடுக்க நீ வருவாயா
உதிரம் குடிக்கத்துணிவாயா.....
உனது நினைவுத்தென்றல்
வாங்க முழுநிலவின்
நிழலில் முகமுயர்த்தி
முகாமிட்டிருக்கிறேன்
முழுநிலவின்
ஒளி முகத்தில்
முத்தமிடுகிறது
குளிர்ச்சியாக....
உதிர்கிறது
ஒற்றைபூஇதழொன்று
உச்சியிலிருந்து
உன் பிரதினிதியாக
என் இதழைக்
குறிபார்த்து
இதுகாறும் அடர்ந்து
படிந்திருந்த
ஆன்மாவின் அழுக்குகள்
விடைபெறுகின்றன
அகலுமாசை இல்லாமல்
உற்பத்தியாகிறது
புதிய நதி ஆழ்மனதில்
கரைப்புரண்டோடும்
ஆவலுடன்
அதுஓர்வானவில்லை
பிரசவிக்கும் இனிய
அவஸ்தை....
அருவிதலையில்விழும்
அனுபவம்..
மரிக்கொழுந்தின்
மனம் மயக்கும் வாசம்........