Sunday, 7 December 2014

விழிகளுக்கு அப்பாலும்
விழித்திருக்கின்றன
உன் நினைவுகள்
என் விழிகள் உன்னைக்
காணாதபொழுதுகளில்
இதயத்துடிப்பின்
இடைவெளிகளிலும்
நினைத்தே துடிக்கின்றது
என் இதயம்......
உன்பெயரில்லாத
கவிதைகளில்கூட
உன்பெயர்தான்
நிழலாடுகின்றது
என் நினைவுகள் 
தப்பியிருக்கும்
மயக்கபொழுதில்கூட
உன்நினைவே 
ஆட்கொண்டிருக்கின்றது
என்ன மாயம் செய்கிறாய்........................
Like ·  · 
உனது ஒற்றைமுத்தத்தில் 
உன்னை உள்ளே வைத்து 
தைத்துவிட்டாய் 
என்னைப்பறித்து 
உன் இதயத்தில் சூடிக்கொண்டாய்
கண் இமைக்கும் நேரத்தில்
மீண்டமுத்தங்களில் 
காதல்தீயை பற்றவைத்தாய் 
முதல்சந்திப்பிலே 
விதைத்தகாதலை முற்றவைத்தாய்....
கரம்பற்றியே காதல்தீயை
பரிமாறினாய் பிரியும்போது
கதவோரம் நின்று கண்கசிந்தாய்......
ஜன்னலில் எட்டிப்பார்த்து
என் இதயம் பிசைந்தாய்.........
ஹைக்கூகவிதை
---------------------------------
நாத்திகர் கடவுளானார் 
மகனின் 
பூஜை அறையில்.........
ஹைக்கூகவிதை
-------------------------------
செல்போன் முடித்துவைத்தது
திருமணத்தை செலவில்லாமல்
மகளுக்கு..........
ஹைக்கூகவிதை
------------------------------
வந்தமழையை நிறுத்தியது
குழந்தையின்
பிராத்தனை................
Like ·  · 
நம்பிக்கை.........
----------------------------------
உதாசீனங்களே
உன்னை உறுதிப்படுத்துகிறது
அவமானங்களே 
உன்னைப் பக்குவப்படுத்துகிறது
தாக்குதல்களே 
உன்னை தயார் செய்கின்றது
தவிர்த்தல்களே
உன்னை தைரியப்படுத்துகிறது
ஒவ்வொருதோல்வியும்
உன்னை வெற்றியை நோக்கி
விரயவைக்கின்றது
விழுவது எல்லோருக்கும்
வியப்பானதல்ல
விழும்போதேஎழுவதை
பற்றியநினைவுடன் விழு
எழும்போது 
விழமல் இருக்கும்படிஎழு 
உன் வீழ்ச்சியில் பரிதாப்படுபவர்கள்
உன்னை மேலும் வீழ்த்துகிறார்கள்
கைதட்டுபவர்களே உனக்கு
கைகொடுக்கிறார்கள்....
நண்பா வாழ்வது ஒருமுறைதான்
எழுந்தால் வாழலாம் 
எத்தனை முறை விழுந்தாலும்..................
.
ஊண் உறக்கமில்லை
உன் நினைவன்றிவேறில்லை
காணும்பொருள் யாவும்
கண்ணே நீயின்றிவேறில்லை
சிந்தனை யாவும் உன்
சிரித்தமுகமன்றிபிறிதில்லை
கண்மூடிபடுத்தாலும்
கனவிலும் உன் தொல்லை
பேச்சுக்களில்கூட உன் 
பெயர்தவிர்க்கையலவில்லை
பாடும்பொருள் அத்துணையும்
பாவை உன்னைத்தவிரவேறு இல்லை.
அதைபாடாது எனக்கும் 
வேறு பணியில்லை....
Like ·  ·