Friday, 22 February 2013

உன் இதழ்கள் என்ன பகலவனா


பட்டவுடன் என் இதழ்கள் காதல் 


பச்சயம் தயாரிப்பில்


படுவேகமாய்


உயிர்சங்கிலியின் ஆதாரமாக,,,,,


சூரியனால் நிழல் உண்டாகும் 


சூர்யனுக்குநிழலுண்டா ,,,


நான் உனது நிழல் 


நிழலைத்தாங்க உனக்கு 


எத்தனை ஆசை .........


இமைமூடினாலும் இதயம் உறங்கா கனவு 


இதழ் பிரிந்திருந்தாலும் இணைபிரியா உறவு 

இறந்துபோனாலும் பிரிந்துபோகா மனது

இனியொருஜென்மத்திலும் இணையும் பிறகு


மழையாக முத்தமிடுகிறாய் மேனிஎங்கும் 


உடலின் ஒவ்வொரு அணுவையும் நனைக்கிறாய் பூரணமாய் 

ஒவ்வொரு திசுவையும் சூடாக்குகிறாய் 

அணுவைபோலவே தொடர்வினையாய்.....


உச்சி முதல் உள்ளங்கால்வரை 


கட்டிஅணத்து ஆக்கிரமிக்கிறாய் 


குளிர்வித்து குளிர்வித்து சூடாக்குக்றாய்


நீர் போலவே 


அழுக்கற்றுகிறாயா அழுக்காகுகிறாயா


புரியாமல் நான் 


அனுபவித்தலை தள்ளமுடியாமலே......


உனது இமைகளின் கனங்களில்


படிந்துகிடக்கின்றன 


ஒராயிரம் சோகக்கவிதைகள்


உன் முகத்தினில் உறைந்த்துகிடக்கின்றன காலங்களைத்தாண்டிய 


துன்பஇலக்கியங்கள் 


விழியில்சிந்தும் ஒற்றைத்துளியில்


அலையடிக்கிறது 


மனக்குளத்தின் கலக்கங்கள்.....


இதயத்தின் ஈரத்திலும் 


விழிகளின் ஓரத்திலும் 


வாழ்வின் சாரத்திலும் 


மரணம் வரும் நேரத்திலும் 


உன்னில் உறைந்தபடியே

உயிர்த்திருக்கிறேன்.....