Monday, 16 February 2015

உன் ஒற்றைப்

புன்னகைசாவியால்

உள்ளதின் அறைகளெல்லாம்

திறக்கிறாய்

ஓவியப்புதிராக
ஒளிவிளக்கம்
தருகிறாய்
மற்றசாவிகளையெல்லாம்
மறைத்துவைத்து
மாயம் செய்கிறாய்
என் நிஜமாக
என்னை வதம் செய்கிறாய்
Like ·  · 
முடிவை எட்டமுடியாமல்

போட்டி நீள்கிறது

நீளும் கயிற்றின்

இருமுனைகளில்

நீயும் நானும்

எதிர் எதிராக
அறுந்துபோகும்
சாத்தியமே அதிகமாகிறது
தீர்மானித்தே பிரச்ச்னையைத்
தேர்வுசெய்ததால்
நெருங்கிவரும்
சாத்தியங்களை
தெரிந்தே தொலைத்தபடி.............
அந்தக்கேள்வியை 
நீயா கேட்டாய்
இன்னும் என்னால்
நம்பமுடியவில்லை

நம்பமுடியவில்லை
என்னையே
மீண்டும்
மீண்டும்
கேட்டுப்பார்க்கிறேன்
நீ உறுதிசெய்தாய்
மறுபடியும்
தெளிவாகச்சொல்லி
அந்தவார்த்தை
கேட்பதற்குமுன்
என்னுயிபோயிருந்தால்
என் ஆத்மாவாவது
நிம்மதிஅடைந்திருக்கும்
எத்தனைபிறவிஎடுத்தாலும்
என்னிடம் ஒருபோதும்
அந்தவார்த்தை
வரவே வராது............
கனவிலும்.......

அறுவடைபற்றிய
அக்கரை இல்லாமலே
விதைப்பைச்செய்கிறாய்
உன் வீரியவிதைப்பை
விழிகளின் கழிவிரக்கமாய்
வெளிப்படுத்தியதை
கண்டும் காணாமலே
மரணாவஸ்தையை
பரிசாகக்கொடுத்த
உன் தலைகொய்யும்
ஆவேசத்தையும்
அலட்சியம் செய்தபடியே
இரவின் கோரமுகத்தை
பரிசாக்கிவிட்டு
கலைந்தும் கலையாத
போதையை
ஆழமாக விதைத்துசெல்கிறாய்
நிலவின் குளுமையையும்
மரமல்லியின் மணத்தையும்
குறுகுறுக்கும்
தென்றலையும்
விளையாடும்
குழந்தையின்
பொம்மையைப்பறிப்பதுபோல்
கதறவிட்டு
பறித்துச்செல்கிறாய்
மரணித்த உயிராக
துடிக்கும் என்மனத்தை
தூரமாகநின்று
குருதிகொட்டும்
பார்வையுடன்
ரசிக்கிறாய்
சாத்தானைபோல்
உன்னைக்கொல்ல
நீளும் என்கரங்கள்
உன் அருகாமை
வந்தவுடன்
அணைக்கவே தொடங்கும்
அவலமும்
அரங்கேறுகிறது...............
காதல் அரக்கனே கொன்றுவிடு
என்னை இரக்கமில்லாமல்.........
Like ·  · 
உன் காதருகே


சுருளும்


கூந்தலின்


குழந்தையை


பத்திரப்படுத்தினேன்

புத்தகத்தில்

குட்டிபோட்டது

குறுங்கவிதையாக.......


உன் நினைப்பாலே
சோகமானேன்
கண்ணீரைச்சுமக்கும்
மேகமானேன்
உன் அன்புக்கு
தாகமானேன்
உன் உயிரின் 
சரிபாகமானேன்
உனக்காகவளர்க்கும்
யாகமனேன்
உனக்காகக்
காத்திருக்கும்
காகமானேன்.....
உன்னையேபாடும்
ராகமானேன்..........
மூடிய கண்களுக்குள்
எத்தனை
 

இனிய கனவுகள் 

விழித்து பார்க்கையில்
வாழ்க்கை முழுவதுமே
வலிகள்...!!