Monday, 23 March 2015

கண்விழிக்க இயலவில்லை
சகியே காணச்சகிக்கவில்லை
என் வதனம் 
மேனி மெலிந்ததடி 
சகியே மெல்லிய சோகையடி
உறக்கம் தொலந்ததடி
சகியே உள்ளம் நொந்ததடி
உடைகள் சேரவில்லை
சகியேஉள்ளாடைநிற்கவில்லை
உணவும் செல்லவில்லை
சகியே உண்டதும் நிற்கவில்லை
கொலுசும்கழன்றதடி
சகியேகொள்ள இயலவில்லை
பசலை படர்ந்ததடி
சகியே பார்க்கச்சகிக்கவில்லை
உள்ளம் புகுந்தகள்வன்
சகியே ஊர் திரும்பவில்லை
மெல்லசாகிறேனடி 
சகியே போய் சொல்லி
விரைந்துவரச்சொல்லடி........
Unlike ·  · 
என் 

வீட்டுத்தோட்டத்தில்
 
உந்தன் முக வரி
 
மலர்ந்த பூக்களாக
 
Like ·  · 
பூக்கள் 
மலர்ந்திருக்கின்றன
உன் முகத்தில்
புன்னகைஇதழ்விரித்து,,,,,,
 
Like ·  · 
ஒரு வேட்டைப்புலியின்
வேகத்துடன்
லாவகத்துடன் கவ்வினாய்
இதழ்களை
என் தற்காப்பு அரண்களை
நொறுக்கி ,,,,,,,
அதுவரைசேமித்த
கோபத்தீஅன்று
பெருகாட்டுத்தீயாகப்
பரவியது
உச்சகட்டப்
போராட்டத்திற்குப்பின்
பெருமழையாய்
பொழிந்தது 
இருப்பினும்
வெந்துதணிந்ததுகாடு
மலர்கள் பூக்கும்
செடிகள் துளிர்விட்டன
யுகமாற்றத்தின்
வெளிப்பாடாய்
உன் முகத்தில்..........
Like ·  · 
மேக இதழ்களின்
நடுவே
மின்னலாய்
உன் புன்னகை
முத்தமழைக்கு
முன் அறிவிப்பாக.....
நனையும் ஆவலுடன்
நான் கண்மூடி,,,,,,,,,,,,,
எனது சிறகுகளை
விமர்ச்சனக்கல்லெறிந்து
சிதைக்க முற்படுகிறாய்
இயலாது தோல்வியுற்று
துயருறும் வேலைகளில்
மீண்டும் வன்மத்துடன்
திட்டமிடுகிறாய்
தீய்த்துவிடும்
சாத்தியங்களை..
உயரேபறக்கும் வேளைகளில்
சூர்யக்கதிர்களால்
சுட்டெரிந்துவிட
ஆவலுறுகிறாய்
எப்படியேனும்
உன்னைத்தாண்டி
ஒரடி உயரம்கூட
ஏற்கும் மனமில்லை
வானவில்லில் 
நான் முத்தமிட்டாலும்..
Unlike ·  ·