Monday, 16 February 2015


பகலவனின்
ஒற்றை முத்தத்தில்
மரணித்தது
பனித்துளி..........

சிறையிலிட்டுக்
கொடுமைகள்
செய்தாய்
நான் விரும்பியவாறே
என் இதழ்களை
மண்ணைநேசிக்கிறேன்
------------------------------------------------
பெண்ணைநேசிக்கும்
இவ்வுலகில்
நான் பிறந்தமண்ணை
நேசிக்கிறேன்......
என்ன இருக்கிறது
மண்ணில்
உயிர் நினைவுகள்
ஊறிக்கிடக்கின்றன
என் தந்தையின்
வியர்வை
என் தாயின்
கண்ணீர்துளி
என் தாத்தாவின்
நெஞ்சில்கடைசிவரை
இடம்பிடித்த
சளி
நான் அடிபட்டுச்சிந்திய
குருதி
என்சந்ததியின்
சாம்பல்
என்குழந்தையின்
எச்சில்
என்மூச்சில்
கல்ந்ததூசி
நான் தினமும்
மிதித்தாலும்
நான் விழும்போது
தாங்கும் மண்.........
ஆழ்துளைபோட்டு
தன்னைத்துளைத்தாலும்
நான் உயிர்வாழ
நீரைத்தரும் மண்
தான் காய்ந்தாலும்
எனக்கென ஒருவாய்
நீரை ஒளித்துவைத்திருக்கும்
அன்னையைபோலவே..மண்....
கற்சிலை
கண்ணீர்வடித்தது
உளியின்பிரிவு

Thursday, 12 February 2015

சின்னஞ்சிறிய
 
ஊற்றாகத்தான்
 
தொடங்குகிறது
 
பொங்கிபிரவாகமெடுத்து
 
கரைபுரண்டுஓடும்
 

பெரிய ஆறுகள்.....
 

பிரச்சனைகளைப்போல்....

அப்புறம் 
 
என்ற
 
ஒரு வார்த்தைக்கு
 
பின் 
 
வெளிவராமல்
 
வரிசைகட்டி
 
நிற்கின்றன
 
ஓராயிரம் ஆசைகள்.......
Like ·  · 

ஓ என்ற
 
ஒற்றைச்
 
சொல்
 
அத்துனை
 
சுவாரஸ்யத்தையும்
 

விழுங்கி


ஏப்பம் விடுகிறது

 உக்கும்
 
என்ற ஒற்றை
 
பழிப்பு
 
புரட்டிப்போட்டு
 
விடுகிறது
 

அத்தனை
 

பெருமைகளையும்
ஒரு ஹாய்
 
என்பதில்
 
தொடங்கி
 
மிஸ்ஸிங் யூ
 
என கதறும் 
 
உறவுதான்
 
காதல்...............