AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 12 February 2015
உன் காதருகே
சுருளும்
கூந்தலின்
குழந்தையை
பத்திரப்படுத்தினேன்
புத்தகத்தில்
குட்டிபோட்டது
குறுங்கவிதையாக.......
உன் நினைப்பாலே
சோகமானேன்
கண்ணீரைச்சுமக்கும்
மேகமானேன்
உன் அன்புக்கு
தாகமானேன்
உன் உயிரின்
சரிபாகமானேன்
உனக்காகவளர்க்கும்
யாகமனேன்
உனக்காகக்
காத்திருக்கும்
காகமானேன்.....
உன்னையேபாடும்
ராகமானேன்..........
மூடிய
கண்களுக்குள்
எத்தனை
இனிய கனவுகள்
விழித்து பார்க்கையில்
வாழ்க்கை முழுவதுமே
வலிகள்...!!
ஒரு ஈயின்
அநியாயமரணத்துக்கு
காரணமாகிவிட்டாய்
உனக்கென வாங்கி
ஆறியதேனீரில்
மிதக்கிறது...
என்மனத்தைப்போல்
கொத்தாகச்செருகி
இருக்கிறேன்
முத்தமலர்களை
கூந்தல்குழந்தையின்
கரங்களில்
மொ(மு)த்த
பரிசாக........
இன்னும்கொஞ்சம்
முத்தங்கள்
சேமித்து
வைத்திருக்கிறேன்
இதழோரமாக
எப்போதுவேண்டுமானாலும்
நீ
எடுத்துக்கொள்ள
வசதியாக.........
இதழ்கள் காய்ந்து
கிடக்கின்றன
இனிய
உன் நினைப்பாலே
சாரலாய் வந்து
...
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)