Saturday, 10 October 2015

கண்கட்டிவித்தைகளில்
காந்தர்வனவன்
விழித்திருக்கும்போதே
விழுங்குபவன்
விரல்களால்கவிதை
எழுதுபவன்
விழிகளைமூடவைத்து
வித்தைகள் புரிவபவனவன்
விரகதாபத்தைவிதைப்பவனவன்
விடியும்வரை காதல்
கதைபடைப்பவனவன்
கொதிக்கவைத்து
குளிர்விப்பான்
முத்தங்களால்
மோகம்விதைப்பான்
சத்தமில்லாமல்
சரஸம்புரிவான்
சித்தம்கலங்கவைப்பான்
சிரித்தே என்னைகொள்வான்
காதலில்மோசமானவன்
ஆனால்மிகவும்நேசமானவன்.....

No comments:

Post a Comment