Saturday 10 October 2015

எனக்கானகாதலியின் வடிவம்
வரைந்தேஇருக்கிறது
சொப்பனங்களில் சொர்கம்தரும்
அந்தசொப்பனசுந்தரியின்முகம்
ஒப்பனையில்லாமலே
உள்ளம் கொள்ளையடிக்கிறது
நேரில் கண்டதில்லை
நெடுநேரம் பேசியதில்லை
காரிருள் குழலகியின்
கூந்தல் வருடியதில்லை
கரம் பற்றியதில்லை
கைமேல்பட்டதில்லை
கனவில்மட்டும் எதையுமே
விட்டதில்லை
காமம் காதல் மோதல்
ஊடல் கூடல் சாடல்
கொஞ்சல் கெஞ்சல்
எல்லாமே கற்பனையில்தான்
இரவின் கதவுகளுக்குபின்னே
கற்பனையில் வாழ்க்கை
கைகூடுகிறது அதுவே
கவிதைகுழந்தையாய்
பிறக்கிறது எல்லாம்
பசுமரத்தாணியாய்
படிந்துகிடக்கிறது
முகம்மட்டும் முகமதியர்போல்
மூடியேகிடக்கிறது
அப்படியேஇருக்கட்டுமது
முகம் மூடியிருந்தாலும்
இதயம் திறந்தேதானே கிடக்கிறது
திறக்குமொருநாள்
அந்தமுகமூடியும்
அப்போதுதான் தெரியும்
முடிவும் முதலும்
அதுவரை கவிதைக்குழந்தையின்
முகம்வைத்தே பெற்றவளின்
முகம் கற்பனையிலே
பொருத்திப்பார்க்கலாம்
காலம் சொல்லட்டும் பதிலை
..

No comments:

Post a Comment