Friday 8 May 2015

மொதநாளே
கொட்டையரிசிய
உலைலபோட்டு
பருக்கையாவேகவிட்டு
இறக்கிவடிச்சு ஆறவச்சு
தண்ணிஊத்தி ஊறவைச்சிட்டு
சீனிவத்த கத்திரிவத்த
மாவடு போட்டு
புளிகரைச்சுவிட்டு
முளகாதூளபோட்டு
சுண்டவேகவிட்டு
வத்தகொழம்பை வைச்சுபுட்டு
காலங்காத்தாலஎழுந்து
மூஞ்சியகழுவிட்டு
நீராகாரத்தண்ணிய
வயறுமுட்டகுடிச்சுபுட்டு
வயல்ல எறங்கி நடவு
உச்சிலசூரியன் வற
போடிநாயக்கனூர்
ரயிலு எப்படாவரும்னு
குறுக்குஒடியகாத்திருந்து
வரப்பேறி வாய்க்கால்ல
வாய்முகம்கழுவி
வரப்புலஒக்காந்திருக்கும்போது
தெய்வம்மாதிரிஆத்தா
கஞ்சிகொண்டுவந்து
வாழஎலயில 
வத்தக்கொளம்பைவச்சி
கையநீட்டசொல்லி
கஞ்சியபுழிஞ்சி கையில்
வைச்சு நடுவில சுண்டுண
வத்தகொளம்ப வச்சு
வாயருகேகொண்டுபோகுபோதே
எச்சில் ஒழுக உள்ளதள்ளி
எறங்கும்பாரு சுவையா சொகமா
அந்தசுவை சாப்பிட்டாதான்
புரியும்,,,,நடுவுல கருவாடு
வந்தா கடவுளே வந்தமாதிரி....
சொர்கம்.........
Like · Comment · 

No comments:

Post a Comment