Monday 23 March 2015

அறுவடைபற்றிய
அக்கரை இல்லாமலே
விதைப்பைச்செய்கிறாய்
உன் வீரியவிதைப்பை
விழிகளின் கழிவிரக்கமாய்
வெளிப்படுத்தியதை
கண்டும் காணாமலே
மரணாவஸ்தையை
பரிசாகக்கொடுத்த
உன் தலைகொய்யும்
ஆவேசத்தையும்
அலட்சியம் செய்தபடியே
இரவின் கோரமுகத்தை
பரிசாக்கிவிட்டு
கலைந்தும் கலையாத
போதையை 
ஆழமாக விதைத்துசெல்கிறாய்
நிலவின் குளுமையையும்
மரமல்லியின் மணத்தையும்
குறுகுறுக்கும்
தென்றலையும்
விளையாடும் 
குழந்தையின்
பொம்மையைப்பறிப்பதுபோல்
கதறவிட்டு 
பறித்துச்செல்கிறாய்
மரணித்த உயிராக
துடிக்கும் என்மனத்தை
தூரமாகநின்று
குருதிகொட்டும்
பார்வையுடன் 
ரசிக்கிறாய்
சாத்தானைபோல்
உன்னைக்கொல்ல
நீளும் என்கரங்கள்
உன் அருகாமை
வந்தவுடன்
அணைக்கவே தொடங்கும்
அவலமும் 
அரங்கேறுகிறது...............
காதல் அரக்கனே கொன்றுவிடு
என்னை இரக்கமில்லாமல்.........
Like ·  · 

No comments:

Post a Comment