Thursday 16 October 2014

நரமாமிசநெடி
நாசியைத்துளைக்கிறது
கனிந்தமுத்தம்முடிந்து
இதழ்பிரிக்கையில்

...
சற்றேமூடிய
விழி இமைகளின்
வழியேபிதுங்கிவழிகிறது
மூர்க்கமாக காதல்

அய்ம்புலன்களும்
அலறுகின்றன
செவிகளை
திறந்துவைத்து

வெப்பவிதைப்பில்
விதைக்கப்படும் வெப்ப
விதைகளுக்காக
விழிதிறந்துகாத்திருக்கும்
புலன்கள் ஆவலாய்

புலன்களின்
நாக்குகள்வறண்டு
ஈரப்பதம்வேண்டும்
பாலையாய் தவமிருக்கின்றன

எப்போதொ வீசும்
மழைக்காற்றின்
குளிர்வித்தலுக்காக
சிலிர்த்துதகிக்கின்றன
மேடுபள்ளங்கள்நிறைந்த
மணல்திட்டுகளாய்தேகம்

ஒவ்வொருமுறையும்
வரையும்
புதியஓவியங்களை
காணும் ஆவலோடு

No comments:

Post a Comment